ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக புதுவை G.கோபால்சாமி கதை எழுதி தயாரிக்க, யாகவன், சிவகுரு, இருவரும் நாயகர்களாகவும் காயத்ரி,கமலி இருவரும் நாயகிகளாகவும் நடிக்க,
அஜய் ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோர் உடன் நடிக்க,
திரைக்கதை எழுதி ஆர் . கோபால் என்பவர் இயக்கி இருக்கும் படம் மங்களாபுறம்
ஒளிப்பதிவு – திருஞான சம்மந்தம், இசை – கார்த்திகேயன் மூர்த்தி, பாடல்கள் – கோ.சேஷா , வசனம் – சிவா, எடிட்டிங் – ராஜ்கீர்த்தி, கலை – சின்னா , நடனம் – எஸ்.எல்.பாலாஜி, ராம்முருகேஷ்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்ட நிலையில் படத்தைப் பற்றிக் கூறிய இயக்குனர் கோபால்
“புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவில் குடியேறுகிறார்கள்.
அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்யா ஷக்தி தடுக்கிறது.
அந்த அமானுஷ்ய சக்தி யார் ? இளம் காதலர்கள் வென்றார்களா ? அமானுஷ்ய சக்தி வென்றதா என்பதை சொல்வதோடு,
மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதையும் மையக் கருவாகக் கொண்டு படத்தை உருவாக்கி உள்ளேன் . ” என்றார் .
தயாரிப்பாளர் கோபால் சாமி பேசும்போது “ஜமீன்தார் கேரக்டரில் ஆஜர் ரத்தினம் சிறப்பாக nadiத்துள்ளார் . புது முகங்கள் என்றாலும் நாயகர்கள் மற்றும் நாயகிகள் நன்றாக நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு சென்னை காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது படம் இம் மாதம் 12 ஆம் தேதி வெளியாகிறது” என்றார்