திறப்பு விழா @ விமர்சனம்

thiru 1

பூமிகா  இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில்  எம் ஜெரினா பேகம் தயாரிக்க, ஜெய் ஆனந்த், ரஹானா , ஜி எம் குமார், பசங்க சிவகுமார், மனோபாலா ஆகியோர் நடிக்க,

நிலம் கதை  வசனம் எழுத  , கே. ஜி. வீரமணி என்பவர் இயக்கி இருக்கும் படம்  ‘திறப்பு விழா’ . திறப்பு …. விழா காணுமா? பார்க்கலாம் .

வறண்ட நிலம் , நலிவடைந்த விவசாயம் , போராடும் மக்கள் நிறைந்த அந்த கிராமத்திலும் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட, கிடைக்கிற கொஞ்ச வருமானத்தையும் மதுவில் கரைக்கிறார்கள் ஆண்கள் .

விளைவாக பெண்களும் குழந்தைகளும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள் .

thiru 88

அந்த கிராமத்து மதுக்கடையில்தான் வேலை செய்ய வேண்டும் என்று பணி மாற்றல் வாங்கிக் கொண்டு வருகிறான் ஓர் இளைஞன் ( ஜெய் ஆனந்த்)

மதுக்கடையில் மது விற்கும்போது ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து இருபது என்று அதிகம் வாங்குகிறான் . அந்த காசை அந்தந்த வீட்டில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கிறான் .

அளவுக்கு மீறி குடிப்பவர்களுக்கு மது தர மறுக்கிறான் . மாட்டை விற்று குடிக்க வந்தவரை திட்டி, மாட்டைக் கொண்டு போய் அந்த வீட்டுப் பெண்மணியிடம் ஒப்படைக்கிறான். அவர்கள் அவனை வாழ்த்துகின்றனர்

அதே ஊரைச் சேர்ந்த பெரியவர் ( ஜி எம் குமார்) மகளுக்கு (ரைஹானா) அந்த இளைஞன் மீது காதல் . ஆரம்பத்தில் அவன் அதை மறுக்கிறான். 

thiru 77

மதுக் கடையை ஒட்டிய பாரில் வசதியும் ஆள் பலம் அதிகார பலம் படைத்த சிலர் கள்ளச் சாராயம் விற்கின்றனர் . அதைத் தட்டிக் கேட்கும் நாயகனை அடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கின்றனர் .

போலீசும் அவர்களுக்கு உடந்தை . எனினும் அரசு ஊழியன் என்பதால் அவன் மீட்கப் படுகிறான் .

இந்த நிலையில் மகளின் காதல் அறிந்த பெரியவர் தன் மகளை கல்யாணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்க, அவனும் சம்மதிக்க,

அந்த சந்தோசத்தில் மது குடிக்கும் பெரியவரும் அவரது நண்பர்களும் கள்ளச் சாராயம் குடித்து பலியாகின்றனர் .

ஊரே சேர்ந்து நாயகன்தான் கள்ளச் சாராயம் கொடுத்து கொன்று , ஊரையே அனாதையாக்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறது . சட்டம் அவனை விட்டாலும் மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை .

thiru 2

அப்போதுதான் அவன் யாரென்று சொல்கிறான்.

இருபது வருடத்துக்கு முன்பு அதே ஊரில் மூலிகை மருத்துவம் மூலம் பல உயிர்களை இலவசமாக காப்பாற்றிய அம்மாவுக்கும் குடிகார அப்பாவுக்கும் பிள்ளையாக , ஓர் அக்காவுக்கு தம்பியாக பிறந்தவன் அவன்.

அக்காவைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் நிச்சயத்துக்குப் பிறகு,  ஐந்து பவுன் அதிகம் கேட்கின்றனர் . பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்த நிலையில், 

அப்பாவும் அம்மாவும் மனசைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு காரியம் செய்கின்றனர் .

வீட்டில் உள்ள விதை நெல் களஞ்சியத்தை மொத்தமாகக் காலி செய்து அந்த நெல்லை விற்று கல்யாணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர் .

thiru 3

அந்த நெல்லை விற்றுவிட்டு பணத்தோடு வரும் வழியில் மதுக்கடைக்குப் போன அப்பா குடிபோதையில்  பணத்தைப் பறிகொடுக்கிறார் .

போதை தெளிந்து நிலைமை உணர்ந்த அவர் விஷம் குடித்து சாக, அக்கா தூக்குப் போட்டுக் கொண்டு சாக, அம்மா அதிர்ச்சியில் சாக ,

அந்த வீட்டில் தப்பிய சிறுவன்தான் இந்த நாயகன் என்பது சொல்லப்படுகிறது . உண்மை உணரும் ஊர் மக்கள் அவனது தலைமையில் தங்கள் ஊருக்கு சாரயக்கடை வேண்டாம் என்று போராட

பார் நடத்துவோர் முதலில் அதை கலைக்க முயன்று முடியாமல் போக,

thiru 999

அடுத்து வருமானம் போகிறதே என்று அரசும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது . போலீசை விட்டு மக்களை அடித்து விரட்டுகிறது .

மதுக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ் , மதுக்கடை வேண்டாம் என்று போராடும் ஆண் பெண் அனைவரையும் அடித்து உதைத்துக் கொடுமை செய்கிறது .

இதை அடுத்து நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சியான நெகிழ்வான சம்பவமும் அதன் விளைவுமே இந்தப் படம் .

இன்று தமிழகம் எங்கும் மக்கள் தன்னெழுச்சியாக மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் இது துவங்குவதற்கு முன்பே, 

thiru 9

இப்படி ஒரு விசயத்தை கதையாக எழுதிய கதை வசனகர்த்தா நிலம் பாராட்டுக்குரியவர்

விதை நெல்லை விற்றுக் குடித்ததால்  குடும்பமே அழியும் அந்த ஃபிளாஷ் பேக் மனம் கணக்க வைக்கிறது .

வசந்த ரமேஷ் இசையில் பாடல்கள் ஒகே . அதில் ‘இந்தா இந்தா வாங்கிக்கய்யா ஜாதகத்த..’ பாடல் இனிமை .

கதை வசன கர்த்தா நிலம் எழுதி, தஞ்சை செல்வி பாடிய பருத்தி பூப் பூக்கும் பாடலின் வரிகள், அது விவரிக்கும் காட்சிப் படிமம் தஞ்சை செல்வியின் குரல் எல்லாம் மனசை ஊடுருவிப் பாயும் அற்புதம் .

இந்தப் பாடலை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் சொதப்பி இருக்கிறார் இயக்குனர் .

ஹீரோவாக சங்கர் ஜெய் ஆனந்த் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் . இயல்பாக நடித்துள்ளார் .

thiru 4

நாயகி ரஹானா நன்றாக நடிக்கிறார் . ஆனால் இன்னும் சிறுமித்தனம் மாறாத முகத்தோடு (கிளைமாக்சுக்கு இது உதவினாலும் கூட ) ,

அவர்தொப்புள் தெரிய இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடுவதை பார்க்கும்போதுதான்  தர்ம சங்கடமா இருக்கு

பிளஷ்பேக்கில் பசங்க சிவகுமார் பண்பட்ட நடிப்பை தந்துள்ளார் . பணம் தொலைந்ததை அறிந்த உடன் அவர் காட்டும் முகபாவங்கள் மிக சிறப்பானவை .

சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் கிராமத்து மக்களையே உலவ விட்டது சிறப்பு . ஆனால் அவர்களை இன்னும் கொஞ்சம் பொருத்தமாக நடிக்க வைத்து இருக்கலாம்

thiru 6

படத்தின் பிளாஷ் பேக்மற்றும் அதற்கு பின்னால் வரும் காட்சிகளை எடுப்பதில் காட்டிய சிரத்தையை ஆரம்பம் முதலே காட்டி இருக்கலாம் .

இது தவிர தொழில்நுட்ப நேர்த்தியும் குறைவுதான்

இப்படி சில குறைகள் இல்லாமல் இல்லை .

ஆனால் படம் சொல்லி இருக்கும் விஷயம் அபாரமானது. அற்புதமானது . இன்று நம் மக்களுக்கு தேவையானது . சமூகத்தின் நிஜ பிரதிபலிப்பு .

thiru 5

பளபளப்பான தாளில் அச்சிட்டால் என்ன ? சாணிப் பேப்பரில் அச்சிட்டால் என்ன ? திருக்குறள் திருக்குறள்தானே

கிளைமாக்ஸ் அதிர்ச்சியில் உறைய வைத்து உருக வைக்கிறது

திறப்பு விழா … மக்கள் ஆதரிக்க வேண்டிய படம்

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————————

நிலம், பசங்க சிவகுமார் , எம்.ஜெரினா பேகம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *