மூன்று கால கட்டங்களில் ‘மரகத நாணயம்’

maragadha-4

அக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில்  ஜி டில்லிபாபு தயாரிக்க, ஆதி, நிக்கி கல்ராணி ஆனந்த ராஜ், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்க, ஏ ஆர் கே சரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் மரகத நாணயம் .

ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர்,
 முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு  பி வி ஷங்கர், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ் ,  கலை இயக்குநர் என் கே ராகுல். 
maragadha-99
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டார்கள் 
ஒரு வட்ட வடிவமான நாணயம் போன்ற மரகதக் கல்லை முன் நிறுத்திப் போகிறது படம் . நீண்ட இடைவேளைக்குப் பின் ஆனந்தராஜை பார்க்க முடிகிறது .
முண்டாசு பட்டி  மோஸ்தரில் முனீஸ்காந்தைப் பார்க்க முடிகிறது .  ஊமை போல இருந்து திடீரெனக் கொந்தளிப்பது போன்ற ஒரு கேரக்டரில் நிக்கி கல்ராணி எக்ஸ்பிரஷன் காட்டுகிறார் 
படம் பற்றிக் கூறிய இயக்குனர ஏ ஆர் கே சரவன் “இது மூன்று காலகட்டக்கதை 
maragadha-8
முதல் காலம் கிபி 1100இல் நடக்கிறது . அடுத்த கால கட்டம்  1902இல் நடக்கிறது . மூன்றாவது கால கட்டம்  2016 இல் நடக்கிறது . முதல் கால கட்டத்தை கிராபிக்சில் சொல்கிறோம் .
இரண்டாவது கால கட்டம் பத்து நிமிட நேரம் வருகிறது . மற்ற எல்லாம் நிகழ்வில் வருகிறது . 
ஒரு மரகதக் கல்லை முன் நிறுத்தி நடக்கும் கதை இது . 
இதுவரை ஆதி சாரை ஒரு அதிரடி நாயகனாக தான் பார்த்து இருப்பார்கள். ஆனால் எங்களின்  மரகத நாணயம் மூலமாக முற்றிலும் மாறுபட்ட ஆதி சாரை அவர்கள் காண இருக்கிறார்கள்.
maragadha-3
அவர் மிக சிறப்பாக நடித்துள்ளார் . நிக்கி கல்ராணி அவருக்கு நெருங்கிய நண்பர் .  தவிர கதைக்கும் பொருத்தமாக அமைந்தார் .
படத்தில் அவர் பேசும் திறன் உள்ளவரா ? அற்றவரா என்பதில் ஒரு  சின்ன சஸ்பென்ஸ் இருக்கிறது. 
ஆனந்தராஜும் முனீஸ்காந்தும் வித்தியாசமான கேரக்டரில் அசத்தி இருக்கிறார்களரசிகர்கள் .இதுவரை எவரும் கண்டிராத நகைச்சுவை குணங்களை கொண்டு நாங்கள் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய சுதந்திரம் கொடுத்து, என்னை ஊக்குவித்த என்னுடைய தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு சார் அவர்களுக்கு  என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
maragadha-7
அதேபோல், ஒவ்வொரு காட்சியிலும் கன கச்சிதமாக நடித்து, மரகத நாணயத்தின் ஒளியை கூட்டிய கதாநாயகன் ஆதி சாருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.”
— என்று கூறுகிறார் மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ ஆர் கே சரவண்
“எங்கள் அக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தை பொறுத்த வரை கதை தான் ஹீரோ. வலுவான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே நாங்கள் தேர்வு செய்து தயாரித்து வருகிறோம்.
maragadha-1
வெறும் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமில்லாமல்,  தரமான திரைப்படங்களின் அற்புதத்தை ரசிகர்களுக்கு  உணர்த்த வேண்டும் என்பதில் தான் எங்களுக்கு நாட்டம் அதிகம்.
 அதனை எங்கள் மரகத நாணயம் திரைப்படம் உறுதிப்படுத்தும். 90 கதைகளை கேட்டு, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த மரகத நாணயம்.”
–என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனருமான ஜி டில்லி பாபு.   
” திரைப்படங்களில் பொதுவாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும்  மசாலா காட்சிகள் இந்த படத்தில் இருக்காது. ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடி வரை,
maragadha-9
ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள். இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை நாங்கள் எங்களின் மரகத நாணயம் படத்தில் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம்.  
என்னுடைய  புதிய அவதாரத்திற்கு  பிரகாச வெளிச்சத்தை  இந்த மரகத நாணயம் ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”
— என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மரகத நாணயம் படத்தின் கதாநாயகன் ஆதி.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *