பட்டதாரி @ விமர்சனம்

patta-1

ஜி ஈ எஸ் மூவீஸ் சார்பில் எஸ். இளங்கோவன் லதா தயாரிக்க, அபி சரவணன் , அதிதி , ராசிகா நடிப்பில்  ஏ ஆர் சங்கரபாண்டி என்பவர் இயக்கி  இருக்கும் படம் பட்டதாரி . 

வெற்றிப் பட்டம் விடுவானா இந்த பட்டதாரி ? பார்க்கலாம் . 

மதுரையில் படித்து விட்டு சரியான வேலை கிடைக்காமல் டீக் கடை , டாஸ் மாக் என்று சுற்றிக் கொண்டு இருக்கும் நண்பர்கள் சிவா (அபி சரவணன்), சுரேஷ் (அம்பானி சங்கர்), ரஞ்சித் (துரை) விஜி (கார்த்திக்) 
மற்றும் டீக் கடையில் வேலை செய்யும் பாக்கியநாதன் (கலையரசன்) ஆகியோர் நண்பர்கள்  . 
இவர்களில் பலரும்   ஒவ்வொரு பெண்ணை காதல் என்ற பெயரில்  பயன்படுத்திக் கொள்ள முயல, ஒவ்வொருவரின் குட்டும் உடைந்து அந்த பெண்கள் அவர்களை விட்டுப் போகிறார்கள். 
patta-3
ஆனால் சிவா மட்டும் எந்தப் பெண்ணையும் திரும்பிப் பார்க்காமல் இருக்கிறான். 
ஆனால் இலக்கியா (அதிதி) என்ற பெண் அவனை மனப்பூர்வமாக காதலிக்கிறாள் . அவள் எவ்வளவோ முயன்றும் சிவா காதலை ஏற்காத நிலையில் , இலக்கியா கார் முன் பாய்கிறாள் . 
அவள் மருத்துவமனையில் சேர்க்கப் பட, குற்ற உணர்ச்சியோடு சிவா அங்கு வர, தன் காதலி ஏற்க மறுப்பது ஏன் என்று இலக்கியா கேட்க ,
 தானும் சரோ என்ற பெண்ணும் (ராசிகா ) காதலித்த கதையையும் அந்த காதலுக்கு ஏற்பட்ட முடிவையும் சிவா கூறுகிறான் . 
 
patta-5
அந்த காதலின் முடிவு என்ன ? இலக்கியாவின் காதல் வெற்றி அடைந்ததா என்பதே பட்டதாரி 
அபி சரவணன் உற்சாகமாக நடிக்கிறார் . அதிதியும் ராசிகாவும் அழகாக இருக்கிறார்கள் . நண்பர்கள் ஒகே . 
 வைக்கம் விஜயலட்சுமியின் குரலுக்கு அதிதியின் நடிப்பு பொருந்தவில்லை .  
ராசிகா அப்பா ,அம்மா அண்ணன் , பெண் இன்ஸ்பெக்டர் ஆகியோர் நடிப்பு படு செயற்கை . 
டைட்டில் போடும் விதம் முதல் பல வகையிலும் ஆர்வக் கோளாறு படம் முழுக்க தெரிகிறது . 
கே  டிவியில் நான்கைந்து சுமார் ரக படங்களைப் பார்த்து பிங்கி பிங்கி பாங்கி முறையில் காட்சிகளை செலக்ட் பண்ணி படமாக்கியது போன்ற ஓர் உணர்வு . 
patta-2
பல படங்களில் பார்த்த காட்சிகள் , கதைப்போக்கு , கேட்டுப் புளித்த வசனங்கள் . கிளைமாக்ஸ் சிறுபிள்ளைத்தனம் . 
படம்  பண்ண ஒரு தயாரிப்பாளரை கவர்ந்தால் போதும் . நல்ல படம்  பண்ண சிறந்த ரசனையையும் வெற்றிப் படம் பண்ண மக்கள் கூட்டத்தையும் கவர வேண்டும் . அதற்கான எந்த முயற்சியும் படத்தில் இல்லை 
பட்டதாரி … நிறைய அரியர்ஸ் காரணமாக பட்டம்  கொடுக்கப்படவில்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *