தமிழில் வால்டர் பிலிப்ஸ் இஷா தல்வார் நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடிக்க,
எஸ் வி தி ஜெயச் சந்திரன் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்க மீண்டும் ஒரு காதல் கதை என்ற பெயரில் உருவாகிறது
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட டிரைலரும் பாடல்களும் இளமை கொப்பளிக்கும் இனிமையோடு இருந்தன
விழாவில் இளம் நடிகர் அர்ஜுன் பேசும்போது ” படத்துல ஹீரோவவிட எனக்கு தான் காஸ்ட்லியான ட்ரெஸ். அந்த அளவுக்கு இயக்குனர் எனக்கு பார்த்து பார்த்து ட்ரெஸ் செலெக்ட் பண்ணினார்.
கேமரா மேன் விஷ்ணு இங்க வரலை. அவருக்கு நன்றி. அவ்வளவு அழகா விசுவல் பண்ணிருக்கார் “என்றார்
நாயகன் வால்டர் பிலிப்ஸ், படத்தில் பணியாற்றிய ஒருவரை விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் படத்தை பற்றிp பேசிய போது
“இயக்குனர் ஜவகர், நான் ஒரு புது ஹீரோ என ஒரு நாளும் நினைக்கவில்லை. எவ்வளவு ப்ரீடம் கொடுக்க முடியுமோ அவ்ளோ கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லணும்.
மேலும் கேமராமேன் விஷ்ணு அவ்வளவு அழகா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார்.
இஷா தான் இந்த படத்துல நடிக்கனும் முன்னவே பிக்ஸ் பண்ணிட்டோம். ஆனா அவங்க நடிக்க ஒத்துப்பாங்களானு ஒரு டவுட்.
நிறைய பேரை ஆடிசன் வச்சோம். ஆனா ஒருத்தர் கூட செட் ஆகலை. வேற வழியில்லாம இஷா கிட்டவே கேட்டோம்.
முதல்ல ஒரு சின்ன தயக்கம் அவருக்கு. என் கூட நடிக்கனுமானு, பின்ன சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு புது ஹீரோவோட நடிக்கிறோம்னு எந்த ஒரு அலட்டலும் இல்லை. அவ்வளவு நன்றாக பழகினார்.” என்றார்
இயக்குனர் ஜவகர் பேசும்போது “முதல்ல தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பத்திதான் சொல்லணும். இப்படி ஒரு அன்பானவர நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு நன்றாக பழகக்கூடியவர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் போது சொல்லிட்டே இருப்பாரு. யாரடி மோகினி படத்துல வர்ற, எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல் மாதிரியே, எடுக்கணும் சொல்லிட்டே இருப்பார்.
கண்டிப்பா எடுக்குறேன்னு சொல்லி அவர்ட இசையை வாங்குனேன்.
மலையாள படத்தை அப்படியே ரீமேக் பண்ணலை, அது ரொம்ப போர். தமிழுக்கு என்ன தேவையோ அத எல்லாம் சேர்த்து எடுத்துருக்கேன்.
இதுக்கு முக்கிய காரணம் என்னோட கோ டைரக்டர் ஜீவன் தான். அவரு இந்த படத்துக்காக என்னோட சேர்ந்து நிறைய உழைச்சிருக்காரு.
மேலும் என்னோட உதவி இயக்குனர்களுக்கும் நன்றி. கேமரா மேன் விஷ்ணுவுக்கும் நன்றி ” என்றார்
நடிகை இஷா தல்வார் பேசும்போது ” மலையாள படம் என்னோட முதல் படம். அந்த படத்துல நடிச்ச அதே பீலோட தான் இந்த படத்துலயும் நடித்தேன்.
இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளேன். இதற்கு வால்டருக்கும், ஜவகருக்கும் நன்றி சொல்லணும் ” என்றார்