பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ சி எஸ் அருண்குமார், அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் ஆகியோர் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி , கீத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சார் , பாபா பாஸ்கர், கருணாஸ் நடிப்பில் ஹிப் ஹாப் ஆதி கதை திரைக்கதை பாடல்கள் எழுதி இசை அமைத்து இயக்கி இருக்கும் படம்.
2017 ஆம் ஆண்டு இதே குஷ்பு, ஹிப் ஹாப் ஆதி இணைவில் மீசையை முறுக்கு முதல் பாகம் வந்து வெற்றி பெற்றது .
அந்த ”முதல் பாகம் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியது; இந்த இந்தப் படம் இசையைப் பற்றி பேசும்” என்று பட வெளியீட்டுக்கு முன்பு ஆதி சொன்னார். பேசி இருக்கிறாரா? பார்ப்போம்.
1980 களில் – மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கர்நாடக சங்கீதத்தின் மூலம் இசை உலகை ஆண்டு கொண்டு இருந்த சூழலில் , பிரபல கர்நாடக வித்வான்களின் கச்சேரியை நடத்தும் ஒருவரின் ( ஆடுகளம் நரேன்) மகன் (கருணாகரன்),
எதிர்பாராத விதமாக ஒரு கானா பாடல் கேஸட்டைக் கேட்டு அது பிடித்துப் போய் அதை பாடிய தாஸ் என்ற கானா பாடகரைக் ( ஆதி – 1) கண்டுபிடித்து, மேல்சாதி மேட்டுக்குடி மக்கள் மட்டுமே பாடவும் பார்க்கவும் முடிகிற பெரிய கர்நாடக சங்கீத சபாவில் பாட வைக்க முயல, அது முறியடிக்கப்பட்டதோடு தாஸ் அவமானப்படுத்தப்படுகிறான். ”என்றாவது ஒரு நாள் எங்கள் கானா இசையும் வெல்லும்” என்று சபதம் போடுகிறான்.
நிகழ் காலகட்டத்தில் பஸ் டிரைவர் ஒருவரின் (பாபா பாஸ்கர் ) மகனான இளைஞன் (ஆதி – 2) தன் நண்பனோடு சேர்ந்து கானா பாடல்கள் பாடுவது, அதன் மூலம் திரை உலகில் இடம் பிடிப்பது என்று போராடுகிறான் . மகன் எப்படியாவது முன்னேறி லைஃபில் செட்டில் ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை
ஆனால் திரையுலகம் வாரிசுக் கலைஞர்களுக்கு மட்டும் இடம் கொடுத்து புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு தராமல் கதவை மூடுவதால் அவன் பாதிக்கப்படுகிறான் .
ஒரு டான்ஸ் மாஸ்டரை ( கீர்த்திகா ஷர்மா) கரெக்ட் செய்யும் விஷயத்தில் அவனுக்கும் ஒரு தயாரிப்பாளர் மகனுக்கும் போட்டி வர, அவளோ லெஸ்பியன் என்பது தெரிய வருகிறது.
ஒரு நிலையில் அந்த தயாரிப்பாளர் மகனுக்கும் அவனுக்கும் இடையிலான சண்டையாக அது மாற , போலீஸ் ஸ்டேஷன் வரை போகிறது .
மகனின் நிலைமை பற்றி பஸ் டிரைவரான அப்பா கவலைப்படுகிறார் .அப்போதுதான் அவரது கதை மகனுக்கு சொல்லப்படுகிறது
எண்பதுகளில் கர்நாடக இசை சபாவில் கானா பாட்டை பாட முயன்ற தாஸின் மகன்தான் அந்த பஸ் டிரைவர்.
சபா வாசலில் தாஸை அவமானப்படுத்திய அது கர்நாடக இசை மேதையின் (நாசர்) பேத்தி ( ரம்யா ரங்கநாதன் ) தாஸின் மகனை (ஆதி – 3 ) காதலித்து குடும்பத்தை மீறி கல்யாணம் செய்து கொண்டு அவனுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறாள்.
அதாவது தாஸ் தனது கானா பாட்டை சபா வாசல் வரை கொண்டு போக, தாஸின் மகன் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வரை கொண்டு போகிறான். எனினும் எதிர்பார்த்த இழப்பு ஒன்று ஏற்பட, அவனும் இசையை கை விட்டு மகனைக் காப்பாற்ற பஸ் டிரைவர் ஆகிறான்.
தங்களது பாரம்பரிய இசையான கானா இசைக்கு ஒரு அடையாளம் கிடைக்க, தனது தாத்தா , அப்பா இருவரும் போராடி தோற்ற நிலையில் ‘தன்னாலும் முடியாது ; இசை உலகம் மேட்டுக்குடிக்குதான்’ என்ற விரக்தி மனநிலைக்கு இந்த ஜென்ஸீ இளைஞனும் வர,
ஒரு நிலையில் உத்வேகம் கிடைத்து , இதுவரை அதில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பதை உணர்ந்து, தெளிந்து போராடியபோது நடந்தது என்ன என்பதே படம்.
மண்ணின் இசை, மொழி, வாழ்வியல் இவை எல்லாம் காலை மற்றும் இசை வடிவங்களில் நம் மண்ணிலேயே புறக்கணிக்கப்பட்டு ,
ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடி இசை , இந்த மண்ணுக்கு சம்மந்தமில்லாத மொழி, அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே அதிலும் முன்னுரிமை, திறமைக்கு மரியாதை இன்மை…. இவற்றால் உண்மையான திறமையாளர்கள் ஒடுக்கப்படுவதையும் ,
சென்னையின் பல வரலாற்று விஷயங்களின் ஆதாரமாக இருக்கும் கானா இசை எப்படி மேட்டுக்குடி மக்களால் இழிவானதாக காலகாலமாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதையும்
சினிமாவில் வாரிசுகள் திணிக்கப்படுவது மூலம் புதியவர்கள் எப்படி திறமையை வெளிப்படுத்த முடியாமலேயே வீழ்ந்து விடுகிறார்கள் என்பதையும்
பேசும் படம் இது அதுதான் இந்தப் படத்தின் முதல் சிறப்பு .முக்கிய சிறப்பு
ஜென்ஸீ இளைஞனாக மட்டுமே இல்லாமல் தாஸ் , பஸ் டிரைவர் இவர்களின் பிளாஷ் பேக்குகளில் அந்த கேரக்டர்களாக , ஆதியே நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் வெகு ஜன ஆடியன்ஸை கொஞ்சம் குழப்பும் என்றாலும் புரியும் போது அட என்று ஆச்சர்யப்பட வைக்கும் அந்த உத்தி சிறப்பு .
சமூக நீதியோடு கானாவின் பக்கம் நின்று பேசும் வசனங்கள் அருமை.
இரண்டு தலைமுறையாக முடியாத ஒன்றை மூன்றாம் தலைமுறை இளைஞன் ஒரு சாதிப்பதோடு, தோற்றுப் போன தனது முந்தைய தலைமுறையும் ஜெயிக்க வைத்தான் என்பது உணர்வுரீதியாக அருமையாக இருக்கிறது
”ஆரா பத்துக்கு பத்து…” பாடல் செம ஹிட்.
வழக்கம் போல உற்சாகமாக நடிக்கிறார் ஆதி அட்டகாசமான வைப் உடன் நடிக்கிறார் ஆதி. அந்த வெள்ளந்தி புன்னகை இதிலும் பிளஸ்,சமூக நீதி வசனங்களை பேசும்போது நடிப்பில் ஜொலிக்கிறார்
கதாநாயகி கீத்திகா சர்மா கிக் ஏற்றுகிறார் . ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சார் இருவரும் சிறப்பு.
கருணாஸ் வழக்கம் போல சிறப்பாக நடிக்கிறார். கிளைமாக்சில் ஒரு துளி கண்ணீர் காட்சியில் நடிப்பில் கனம் சேர்க்கிறார் பாபா பாஸ்கர்
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பழுதில்லை. பென்னி ஆலிவரின் படத் தொகுப்பு சிறப்பாக இருக்கிறது
ரம்யா ரங்கநாதனின் வயிற்று மடிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் மீசையை முறுக்கு 2 .. கருத்தியலும் கமர்ஷியலும் கலந்த கதகளி. முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு,