மீசைய முறுக்கு @ விமர்சனம்

meesa 1

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி தயாரிக்க, 

இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசை அமைத்து கதாநாயகனாக நடித்து இயக்க, 
 
கதாநாயகியாக அறிமுகம் ஆத்மிகா, மற்றும் விவேக், இவர்களுடன் பல புது முகங்கள் நடிக்கும் படம் மீசையை முறுக்கு.  சரக்கின் முறுக்கு எப்படி?
 
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தனது வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எடுத்திருக்கும் படமாம் இது .
meesa 2
தமிழ்ப் பற்று மிக்க, நேர்மையான  அப்பாவுக்கும் ( விவேக்)  பாசமான அம்மாவுக்கும் (விஜய லட்சுமி) பிள்ளை . ஒரு  பலசாலியான தம்பி .
தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார் . நட்பு வட்டம் பகை வட்டம் எல்லாம் உருவாகிறது . வெண்ணிலா என்ற பெண்ணை (ஆத்மிகா) காதலிக்கிறார் . 
 அந்தப் பெண்ணின் வீட்டார் சாதி வேறுபாடு காரணமாக காதலை ஏற்காமல் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் 
படித்து முடித்து வேலைக்கு போவார் என்று பார்த்தால் ஆதி  தனி இசை ஆல்பம் துறையில் புகழ் பெற முயல்கிறார் . அந்த முயற்சி தாமதம் ஆவதால் காதலியால் சமாளிக்க முடியவில்லை 
meesa 3
காதலி பிரிகிறாள் . ஆதி வென்று இசை மேடை ஏறும்போது காதலி வேறொருவனுக்கு மனைவியாவதற்காக மணமேடை ஏறுகிறார் .
இவர் கழுத்தில் வெற்றி மாலை விழும்போது அவள் கழுத்தில் வேறு ஒருவனின் மனைவியாக தாலி விழுகிறது 
ஜெயிக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் இப்படி ஒரு இழப்பு சோகம் இருக்கும் என்பதை படம் சொல்கிறது .
அந்த காலத்து டி. ராஜேந்தரின் கல்லூரி வாழ்க்கை படத்தை இப்போதைய மேக்கிங்கில் பார்க்கும் உணர்வை படம் தருகிறது .
காதல் , மோதல், நட்பு , சண்டை எல்லாம் கலந்த கல்லூரி வாழ்க்கை .
meesa 4
ஆதி நன்றாக ஆடுகிறார் பாடுகிறார் நடிக்கிறார் . 
ஆத்மிகா அழகு . 
கம்பீர அப்பாவாக விவேக் கெத்து காட்டுகிறார் . 
நண்பர்களாக நடித்துள்ள பலரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர் . 
பாடல்கள் இனிமை . 
கல்லூரிக் காலத்தில் டெர்ரராக இருந்த மாணவன் படிப்பை முடித்து ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்டாக அலைவது நெகிழ்வாக சொல்லப் படுகிறது 
meesa 5
காதல், காமெடி , செண்டிமென்ட் எல்லாம் கலந்து படம் போகிறது 
கிளைமாக்ஸ் மனம் கனக்க வைக்கிறது . 
இளைஞர்களை கவர வாய்ப்புள்ள படம் 
மீசைய முறுக்கு … சரக்கு முறுக்கு!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *