எந்த நேரத்திலும் @ விமர்சனம்

endha 1

அஞ்சலி எண்டர்டெயின்மென்ட் சார்பில் என். ராமலிங்கம் தயாரிக்க, ராம கிருஷ்ணன்  , லீமா பாபு , சாண்ட்ரா எமி நடிக்க,

ஆர் முத்துகுமார் எழுதி இயக்கி இருக்கும் படம் எந்த நேரத்திலும் . ஒரு நேரமாவது ரசிக்க முடியுமா ? பார்க்கலாம் .

ஊட்டியில் வாழும் இளைஞன் ரெக்ஸ் ( ராம கிருஷ்ணன்) என்ற இளைஞனுக்கும் பாரதி (லீமா பாபு) என்ற பெண்ணுக்கும் காதல்.
endha 4
ரெக்ஸ் தன் காதலியை , காதல் திருமணம் செய்து கொண்டிருக்கும் அக்கா ஜெனிபருக்கு (சாண்ட்ரா எமி) அறிமுகப்படுத்த , 
பாரதியை மறுதலிக்கிறாள் ஜெனிபர் . ஜெனிபரின் கணவன் டேவிட்டும்(யஷ்மித்) பாரதியை வியப்போடு பார்க்கிறான் . 
இந்நிலையில் ஒரு விபத்தில் டேவிட்டும் ரெக்சின் அப்பாவும் இறக்கின்றனர் . 
endha 6
மன ஆறுதலுக்காக ஜெனிபரும் ரெக்சும் கோத்தகிரியில் உள்ள பங்களாவுக்கு போக , அங்கே பாரதியின் உருவம் கொண்ட ஒரு பெண்ணின் ஆவி, ஜெனிபரின் குழந்தை மேல் வந்து ஜெனிபரை கொலை செய்ய முயல்கிறது .
டேவிட்டை காதலித்து ஜெனிபராலும் அவள் தந்தையாலும் கொல்லப்பட்ட பெண்தான்  (இரு வேடம் லீமா பாபு) அந்த ஆவி. 
சாமியாரின் உதவியோடு அந்த ஆவியிடம் இருந்து அக்காவையும் அக்கா மகளையும் ரெக்சால் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே இந்தப் படம் . 
endha 7
ஊட்டி மற்றும் கொத்தகிரியின் அழகை சிறப்பாகக் காட்டுகிறது சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு . 
ராம கிருஷ்ணன் – லீமா பாபு கெமிஸ்ட்ரி சிறப்பு . 
சதீஷின் பாடல் இசையும் சபேஷ் முரளியின் பின்னணி இசையும் ஒகே 
சிங்கம் புலிதான்  படுத்தி எடுக்கிறார் . மொத்தமாக வெட்டி வீசலாம் 
endha 8
மிக சாதரணமான முதல் பாதி . இரண்டாம் பாதி விறுவிறுப்பு . 
ஜெனிபராக வரும் சாண்ட்ரா, ஆவியாக வரும் லீமா பாபு, பேய் பிடித்த குழந்தையாக  நடித்திருக்கும் சிறுமி விஜிதா ஆகியோர் சின்சியராக நடித்துள்ளனர் . பாராட்டுகள் .
கிளைமாக்சில்  மேக்கிங்கில்  மிரட்டுகிறார்கள் .  சிறப்பு .
endha 9
படத்தில் வரும்  எல்லாமே பார்த்து சலித்த காட்சிகள்தான் . புதுசாக எதுவும் இல்லை என்பதே குறை . 
எந்த நேரத்திலும் … பழகிய நல்ல நேரம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *