இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் எனப் பெயர் பெற்றுள்ள படம் மட்டி (Muddy).
புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப் படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப் படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் , ரிதான் கிருஷ்ணா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
இப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு முன்னோட்டம் திரையிடப் பட்டது .
நிகழ்ச்சியில் இயக்குனர் பிரகபல் பேசும்போது, ” இந்த ப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன், என மூன்று ஸ்டேஜ்களிலும் நிறைய வேலை இருந்தது. மேலும் படம் நல்லா வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.
ஆக்ஷுவலா இந்தப் படத்தில் எடிட்டிங். கேமரா, மியூசிக், CG உள்பட டெக்னிக்கல் வொர்க் அதிகம். 14 கேமராக்கள் வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.
இது என்னோட பர்ஸ்ட் ப்ராஜெக்ட் . ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன். .படத்தின் நடிகர்கள், எடிட்டர், டயலாக் ரைட்டர், மியூசிக் டைரக்டர், சினிமாட்டோகிராபர், vfx டீம் என எல்லோரும் ரொம்ப நல்லா வொர்க் பண்ணிருக்காங்க.” என்றார்.
நடிகர் அஜித் கோஷி பேசும்போது, “எனக்கு இது மலையாளத்தில் முதல் படம். நான் படத்தில் சின்ன ரோல் தான் பண்ணிருக்கேன். இந்த கேரக்டரை இயக்குநர் ஒரு மானிட்டரில் சுருக்கமாகக் காட்டினார். அதனால் படத்தில் என் கேரக்டருக்காக நன்றாகத் தயாராக முடிந்தது.” என்றார்.
படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ், ” மட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.
ராட்சசன் படம் முடித்த பின் எனக்கு கேரளாவில் இருந்து இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்னபோது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது.
இந்தப் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அப்போது ஷுட் செய்த புட்டேஜை காட்டினார்கள். இந்தப் படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன். வொர்க் பண்ணவும் ரொம்ப இன் ட்ரெஸ்டாக இருந்தது.
இயக்குநரிடம் கொஞ்சம் டைம் கொடுத்தால் நன்றாக பண்ணலாம் என்று சொன்னேன். இயக்குநர் நிறைய டைம் கொடுத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. 5 மொழிகளில் படம் வருகிறது ” என்றார்.