பிச்சைக்காரன், சைத்தான். கொலைகாரன், திமிரு புடிச்சவன் போன்ற , விதிர்விதிர்க்க வைக்கும் பெயர்கள் கொண்ட படங்கள் மூலம் பரபரப்பாக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி ,
தனது இன்னொரு வகையிலான நான், சலீம், அண்ணாதுரை, காளி படங்களில் இருந்தும் மாறுபட்டு மிக அட்டகாசமான தலைப்பைக் கொண்ட படமாக நடித்திருக்கும் படம் ‘கோடியில் ஒருவன்’
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ,ஒளிப்பதிவினை N S உதயகுமார் மேற்கொள்கிறார் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
இணை தயாரிப்பு – கமல் போஹ்ரா ,லலிதா தனஞ்செயன் ,B பிரதீப் , பன்காஜ் போஹ்ரா , விக்ரம் குமார் .
படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் , விஜய் ஆண்டனி , இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், நாயகி ஆத்மிகா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் , கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி ” கொலைகாரன் படத்திற்குப் பிறகு இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய மெட்ரோ படம் பார்த்த போதே அவரை பாராட்டினேன். ஆள் படத்தையும் சிறப்பாக இயக்கி இருந்தார் . இந்தப் படத்தின் கதையை அவர் சொன்ன உடன் முழுமையாக இருந்தது. உடனே ஆரம்பித்து படத்தை முடித்து விட்டோம் .
அருமையான படத்தை தந்துள்ளார். மிகச் சிறந்த தொழில் நுட்பத் திறமையும் படைப்பாற்றலும் கொண்டவர் ஆனந்த கிருஷ்ண எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன்.
ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
தமிழ் தெலுங்கில் வெளி வருகிறது . இந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது” என்றார் .
இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் பேசும்போது,
” படத்தில் விஜய் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.
ஒரு சிறிய இடத்தில் உருவாகும் மாற்றம் சரியானதாக இருந்தால் அது எப்படி எல்லா இடத்திலும் எதிரொலிக்கும் என்பதை படம் பேசும். நமக்குத் தெரியாமல் நம்மையே பாதிக்கும் மறைமுக அரசியலை இந்தப் படம் பேசும்.
அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் , சிக்கலைகளையும் மாற்றும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்.” என்றார்
நாயகி ஆத்மிகா தனது பேச்சில், “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள்.
படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும் ,தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். இவர் ஒரு ரியல் லைஃப் ஹீரோ.
இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
ஆனந்த் கிருஷ்ணன் அபாரமான திறமை சாலி மற்றும் உழைப்பாளி. அவர் ஷூட்டிங்கில் ஒரு நாளும் உட்கார்ந்து நான் பார்த்தது இல்லை “என்றார்
தயாரிப்பளார் தனஞ்செயன் பேசும்போது, “கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.
ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர் .இந்த படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது .
இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார் .திமிரு புடிச்சவன் படத்துக்கு அடுத்து அவர் படத் தொகுப்பு செய்யும் படம் இது.
படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி . படப்பிடிப்பு நாடகக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார் .” என்றார்
ஏப்ரலில் திரைக்கு வருகிறது ‘கோடியில் ஒருவன்’