‘முந்தல்’ இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த்தின் அடுத்த படம்

ஸ்டண்ட் ஜெயந்த், இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘முந்தல்’. அப்பு கிருஷ்ணா என்ற, 
 
அறிமுக ஹீரோ நடிப்பில் உருவான இப்படம் சித்த மருத்துவத்தை மையமாக வைத்து உருவான டிராவல் அட்வெஞ்சர் படமாகும்.
 
திரைத்துறை நடத்தி வந்த போராட்டம் முடிந்த உடனேயே, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘முந்தல்’ ,
 
50 நாட்களை கடந்து  மிகுந்த நல்ல பெயருடன் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஜெயந்தின் சந்தோசம் 
 
முதல் படத்திலேயே சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையான கதையை கையில் எடுத்த இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த்,
 
அதை ஆக்‌ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாகவும் கொடுத்தது தான் இப்படத்தின் தனி சிறப்பு.
 
அறிமுக ஹீரோ, புதுமுக தொழில்நுட்ப கலைஞர்களோடு, தனக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில், 
 
மிகப்பெரிய அளவில் படத்தை மேக்கிங் செய்திருக்கும் ஜெயந்துக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள். 
 
ஆரம்பத்திலேயே சென்சார் அதிகாரிகள் இப்படத்தை வெகுவாக பாராட்டியது இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்துக்கு பெரும் உற்சாகம் அளித்த நிலையில், படம் தற்போது 50 வது நாளை கடந்திருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது அவருக்கு .
 
அதேபோல், இயக்குநர்கள் சங்கம் சார்பில் இப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என, 
 
ஏராளமானோர் கலந்துககொண்டு படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
 
கம்போடியா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பது குறித்து இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல இயக்குநர்கள், 
 
ஸ்டண்ட் ஜெயந்தை பாராட்டியதோடு, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் இந்தியில் ரீமேக் செய்தால் மிகப்பெரிய வெற்றி பெறும், என்றும் கூறியிருக்கிறார்கள்.
 
மூத்த இயக்குநர்களின் பாராட்டு, படத்தின் வெற்றி போன்றவற்றால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த்,
 
தனது அடுத்த படத்தை பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது மூன்று பெரிய நடிகர்களிடம், 
 
பேச்சு வார்த்தை நடத்தி வரும் அவர், விரைவில் தனது அடுத்தப் படம் குறித்து அறிவிக்க உள்ளார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *