ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) சார்பில் டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்க, அப்பு கிருஷ்ணா (அறிமுகம்)- முக்ஷா இணையராக நடிக்க,
நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல் ராவ் நடிப்பில்
கதை , திரைக்கதை, வசனம் எழுதி சண்டைக் காட்சிகள் அமைத்து,– ஸ்டண்ட் நடிகராகவும், இயக்குநராகவும் சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள–
ஜெயந்த் இயக்கி இருக்கும் படம் முந்தல். (முந்தல் என்றால் முந்திச் செல்லுதல் என்று பொருள்)
படம் ரசிகர்களை உந்திச் செல்லுமா ? பார்க்கலாமா ?
ராமேஸ்வரத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவரும் சித்த மருத்துவ மேதையுமான துவார சித்தர் ( வி எஸ் ராகவன்),
புற்றுநோயை குணப்படுத்த அதிக செலவில்லாத மூலிகை மருந்தை , முன்னோர்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து கண்டு பிடிக்கிறார் .
அதன் மூலம் புற்று நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் மடியும் ஏழை மக்களைக் காக்க வேண்டும் என்பது அவரது ஆசை .
அவரது உதவியாளரான பவழச் சித்தன் என்ற நபர் , இந்த தகவலை உள்ளூர் அல்லோபதி டாக்டரிடம் ( அழகு) தெரிவிக்கிறார்.
அவர் விஞ்ஞானி என்று சொல்லிக் கொள்பவரும் பணத்தாசை மிக்கவருமான ராபர்ட் மேத்தா என்பவரிடம் ( நிழல்கள் ரவி) தகவலை சொல்கிறார் .
அந்த மருத்துவக் குறிப்பை பெரும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்று ,அவர்கள் தயாரிக்கும் மருந்தை,
கொள்ளை விலைக்கு விற்கும் வகையில் செயல்பட முடிவு செய்யும் ராபர்ட் மேத்தா, அதற்காக துவார சித்தரை நாடுகிறார்.
ஆனால் அப்படி நடந்து விட்டால் ஏழைகளுக்கு இது பயன்படாது என்பதால் மறுக்கிறார் துவார சித்தர் .
எனவே அவரை கொலை செய்கிறார் விஞ்ஞானி .
உயிருக்குப் போராடும் சித்தர் அந்த மருத்துவக் குறிப்பை தனது பேரனிடம் ( நாயகன் அப்பு கிருஷ்ணா )ஒப்படைக்க வைக்கிறார்.
அந்த மருத்துவக் குறிப்பின் ஒரு பகுதி கம்போடியாவில் சோழர்கள் கட்டிய சிவன் கோவிலில் இருக்கிறது .
எனவே தாத்தாவின் நண்பரான சர்ச் ஃபாதர் ஒருவர் மூலம் கம்போடியா போக முயல்கிறான் நாயகன் .
அதற்கான முயற்சியில் இருக்கும் போது சர்ச் நடத்தும் அநாதை விடுதியில் வளர்ந்து இப்போது ஆட்டோ டிரைவராக இருக்கும் ஓர் பெண்ணுக்கும் (முக்ஷா) நாயகனுக்கும் காதல் வருகிறது .
பாதிரியாரின் உதவியோடு தூத்துக் குடியில் இருந்து அந்தமான் வழியாக கம்போடியாவுக்கு, அங்கீகரிக்கப் படாத ஆபத்தான கடல் வழியில் அதிவிரைவுப் படகு மூலம் நாயகன் போகிறான் .
அவனை அங்கே எதிர்கொள்ள விஞ்ஞானியின் குழுவும் செல்கிறது . விஞ்ஞானியின் கட்டளைப் படி நாயகன் வந்தால் கொலை செய்ய , கம்போடிய சண்டை வீரர்களும் காத்திருக்கிறார்கள் .
நாயகன் கம்போடியாவை அடைந்தானா ? ஆம் எனில் மருத்துவக் குறிப்பை எடுத்தானா ? ஆம் எனில் அது விஞ்ஞானியின் கையில் சிக்கியதா ? இல்லை ஏழை மக்களுக்கான விலை இல்லா மருந்தாக வந்ததா?
– என்பதே இந்த முந்தல் . மிக சாதரணமாக இயல்பாக எளிமையாக துவங்கும் படம் மெல்ல மெல்ல சூடு பிடித்து இடைவேளைக்குப் பிறகு அர்த்தப்படுகிறது . சுவாரஸ்யப் படுகிறது . ஒரு நல்ல சமூக அக்கறை உள்ள கமர்ஷியல் படமாக நிறைகிறது .
அவசரத்துக்கு இளநீர் மூலம் ட்ரிப்ஸ் ஏற்றும் ஐடியாவும் அது தொடர்பான வரலாற்று ஆதாரமும் அருமை .
ராசி சிவா காமெடி கல கல .
ஐட்டம் பாடல்களை ஜன ரஞ்சகமாக எடுத்து அசத்துகிறார் இயக்குனர் ஜெயந்த் . ரிஷா ஒரு பாடலுக்கு துடிப்பாக ஆடுகிறார்
ஜெய கிருஷ் இசையில் பாடல்கள் சோடை போகவில்லை .
வி எஸ் ராகவன் இந்த வயதிலும் சிறப்பாக நடித்துள்ளார் . நாயகன் அப்பு கிருஷ்ணா சண்டை விசயத்தில் சூப்பர் .. கதாநாயகி ஜஸ்ட் ஒகே .
தூத்துக் குடியில் இருந்து நாயகன் கடல் வழியாக அந்த மான் சென்று அங்கிருந்து கம்போடியா செல்லும் காட்சிகளில் கடல் புறத்து சண்டைக் காட்சிகளை அபாரமாக அந்தமான் மொரிஷியல் கடல் பகுதியில் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் ஜெயந்த் .
தான் ஒரு மீனவர் என்பதால், கடலை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், பெரிய ஆபத்தான கடல் காட்சிகளையும் சிறப்பாக ரிஸ்க் எடுத்து படமாக்கியுள்ளார்.
சும்மா சொல்லக் கூடாது . ராட்சஷ உழைப்பு . ஒரு இடத்தில் நன்னீர் கடலில் முதலையிடம் இருந்து நிஜமாகவே தப்பி இருக்கிறார் இயக்குனர் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜா .
ஒரு காட்சியில் நாயகன் அப்பு கிருஷ்ணாவும் கடலில் பெரும் ஆபத்துக்கு உள்ளாகி தப்பி இருக்கிறார் .
கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது
தங்களது உயிரை பணையவைத்து மற்றவங்களை வாழ்க்கையில் உயர்த்திவிடும் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்தவர் என்ற வகையில் ஸ்டண்ட் ஜெயந்த், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை படமாகியிருக்கிறார்.
இடையே இடையே மீனவ வாழ்க்கையின் அவலங்களை காட்சிப் படுத்தி இருப்பதும் நெகிழ்வு .
கம்போடிய சிவன் கோவிலில் நடக்கும் சண்டையும் ஓளிச் சுவடியை நாயகன் எடுக்கும் காட்சியும் சிறப்பு .
சமூக நோக்குடன் கூடிய கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது முந்தல் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462