முத்தின கத்திரிக்கா @ விமர்சனம்

kath 7

அவ்னி  மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்க, சுந்தர் சி, பூனம் பஜ்வா , சதீஷ், கிரண்வி,  டி வி கணேஷ் சிங்கம் புலி , யோகி பாபு , ரவி மரியா ஆகியோர் நடிக்க, 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட 

சுந்தர் சி யின் இணை இயக்குனரும், அரண்மனை , மத கஜ ராஜா  உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செய்தவருமான . 
 
வெங்கட் ராகவன்  எழுதி இயக்கி இருக்கும் முதல் படம்   முத்தின  கத்திரிக்கா . 
 
படம் சத்தான கத்திரிக்காயா இல்லை சொத்தைக் கத்திரிக்காயா ? பார்க்கலாம் 
ஒரு நேர்மையான,  போன தலைமுறை லோக்கல் அரசியல்வாதிக்கு மகனாகப் பிறந்து , எதுவும் பெரிதாக சம்பாதிக்காத நிலையில் அந்த அரசியல்வாதி அப்பா இறந்து போக, 
தம்பி தங்கைக்கு நல்ல கல்வியையும் அதன் மூலம் வாழக்கையையும் கொடுத்து …. 
kath 99
அந்த போராட்டத்தில் கல்யாணமே செய்து கொள்ளாமல் நாற்பது வயசு வரை கடந்து விட்ட முத்தின கத்திரிக்கா முத்துப் பாண்டி (சுந்தர் .சி ).
ஒரு முறை  ஒரு பிரச்னைக்காக  அவன் போலீஸ்  ஸ்டேஷனுக்குப் போகும்போது,  அவசரத்துக்கு  அப்பாவின் வேட்டி சட்டையை போட்டுக் கொண்டு போக , 
புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் இன்ஸ்பெக்டர் ,   யாரோ பெரிய அரசியல் புள்ளி  என்று முத்துப் பாண்டியை  நினைத்து,  காரியத்தை முடித்துக் கொடுக்க, 
அரசியல்வாதியாகவும் ஆகி விடுகிறான் முத்துப் பாண்டி .
 ஆனால் தமிழ் நாட்டில் தொண்டர்களே இல்லாத — ஆனால் அகில இந்திய வளரும் கட்சியில் ! 
உள்ளூரில் வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் அண்ணன் தம்பி இருவருமே  (வி டி வி காமேஷ், சிங்கம் புலி ) முத்துப் பாண்டிக்கு எதிரானவர்கள் . 
kath 9
முத்துப் பாண்டிக்கு பெண் தேடும் முயற்சியில் தொடர்ந்து தொற்றுக் கொண்டு இருக்கிறார் முத்துப் பாண்டியின் அம்மா (சுமித்ரா).
ஒரு நிலையில்  மாயா என்ற இளம்பெண்  மீது( பூனம் பஜ்வா நடித்து இருக்கிறார் . அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க பாஸுகளா!) ,  முத்துப் பாண்டிக்கு காதல் வருகிறது . 
மாயாவை பெண் கேட்டுப் போனால் , மாயாவின் அம்மா (முன்னாள் கதாநாயகி கிரண் )   சின்ன வயசில் முத்துப் பாண்டி டாவடித்த ஒரு பெண் !
மாயா விவகாரத்தில் முத்துப் பாண்டி ஒரு பையனின் மண்டையை அப்போதே உடைத்து இருக்க, அவன்தான் இப்போது மாயாவின் அப்பா ( ரவி மரியா) !! 
பழைய சண்டையை மனதில் வைத்துக் கொண்டு தன் மகளை முத்துப் பாண்டிக்கு கொடுக்க மறுக்கிறார் அவர் . 
இந்த நிலையில் முத்துப் பாண்டிக்கு எம் பி பதவி தர விரும்புகிறது  அகில இந்தியக் கட்சி .
kath 8
ஆனால் முத்துப் பாண்டிக்கு அரசியல் ரீதியாக பண உதவி செய்யும் தொழில் அதிபர் ஒருவன் ( ஸ்ரீமன்) அந்தப் பதவியை அடைய முயல்கிறான் . 
இப்படியாக , தன் அக வாழ்க்கை, புற வாழ்க்கை இரண்டிலும் ஏற்பட்டு இருக்கும் இந்த சிக்கல்களில்  முத்துப் பாண்டியால் வெல்ல முடிந்ததா இல்லையா  என்பதே இந்த முத்தின கத்திரிக்கா 
மலையாளத்தில் சிபு ஜேக்கப்  இயக்கத்தில் பிஜு மேனன் நடித்து,  ரெண்டு கோடியே எண்பது லட்ச ரூபாயில்  தயாரிக்கப்பட்டு 2014 செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகி, 
25 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படும்  வெள்ளி மூங்கா (காட்டு ஆந்தை ) என்ற படத்தின் மூலக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு , திரைக்கதை வசனம எழுதி இயக்கி இருக்கிறார் வேங்கட் ராகவன் 
படத்தின் மிகப் பெரிய பலம் வேங்கட் ராகவனின் வசனங்கள். 
படத்தின் கதைக்கு  மிகப் பொருத்தமாக முத்தின கத்திரிக்க என்று பெயர் வைத்தது ,
 kath 1
புல்லட் மருது , வாஞ்சிநாதன் என்று கதா பாத்திரங்களுக்கு பெயர் வைத்தது …
“நாய் துரத்தும் போது ஜட்டி கழண்ட மாதிரி…” போன்ற உருவகங்கள் …
போட்டோவைக்அ கொடுத்து அவனான்னு பாக்க சொன்னா அவனே வந்து பாக்கற வரைக்குமாடா  பாக்குறது போன்ற நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் நகைசுவைகள்  ……
“நான் ஜெயிக்க விரும்புறது தெரிஞ்சா  தோற்கடிக்கப் பாப்பாங்க .. தோற்க ஆசைப்பட்டேன் …அவங்க ஜெயிக்க வச்சுட்டாங்க ” என்று எளிய விளக்கங்களில்  விசயத்தை புரிய வைப்பது…..  என்று , 
இது  வசனம் ஆட்சி செய்யும் படம் !
முத்துப் பாண்டி கேரக்டரை மெல்ல மெல்ல புரியவைக்கும் விதம் , அவனுக்குள் இருக்கும் அரசியல்வாதி கதாபாத்திரத்தை கிளைமாக்ஸ் வரை கச்சிதமாக பயன்படுத்தி இருக்கும்  லாவகம் 
தம்பி குடும்ப சச்சராவுகளை அம்மாவுக்கு ஏற்ற மாதிரி முத்துப் பாண்டி டீல் செய்யும் ஸ்டைல்  , 
kath 6
ஒரு காபி விசயத்தில் தன் மற்ற பிள்ளைகளை விட முத்துப் பாண்டி எப்படி உயர்ந்தவன் என்று அம்மா புரிய வைக்கும் ஆழம்  , 
இவை எல்லாம் திரைக்கதை செய்நேர்த்திக்கு உதாரணங்கள் . 
முத்துப் பாண்டி கேரக்டரை தனக்கே உரிய பாணியில் கேஷுவலாக இயல்பாக ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போயிருக்கிறார் சுந்தர் சி . கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . 
முகத்தில் மட்டும் பிஞ்சுக் கத்திரிக்காயாக இருக்கும் பூனம் பஜ்வா கொப்புங் குலையுமாக இருக்கிறார் .. காட்சிகளில் குடும்பக் குத்து  விளக்காகவும் பாடல்களில் கண்ணைக் குத்தும் விளக்காகவும் இருக்கிறார் . 
kath 2
என்ன …அந்த  (கீழ்) மத்தியப்   பிரதேசம் கண்ணில் படும்போதுதான் மயக்கமே வருகிறது . பூனம் பஜ்வாவால் ஒன்றும் செய்ய முடியாது . காஸ்டியூமர் ஒரு சல்லாத் துணி போட்டாவது மூடி இருக்கலாம் . 
விடிவி கணேஷ் , சிங்கம் புலி, யோகி பாபு, ரவி மரியா  எல்லாரும் நகைச்சுவையில் ஒகே ரகம்.
கிரண்….. சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல .
விபின் சித்தார்த் இசையில்… ‘சும்மா சொல்லக் கூடாது’  பாடல் நைஸ்  . 
நகைசுவைக் காட்சிகளுக்கு இடையே வரும் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் தயாராவதில் அந்த தீம் மியூசிக் பெரும் உதவி செய்கிறது . சபாஷ் . 
பானு குமாரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . வசன ராஜ்ஜியத்தில் ஒளிப்பதிவு இதற்கு மேல் என்ன செய்ய முடியும் ?
முத்துப் பாண்டி காதலியின் அம்மா , அவனது பள்ளிக் கால பெண் என்பதில் ஒரு அதிர்ச்சி நகைச்சுவை இருப்பதை மறுக்கவில்லை .
kath 88
ஆனால் அதை ஒரு டிஸ்டன்ஸில் மெயின்டைன் செய்தே காமெடியில் அதகளம் செய்து இருக்கலாம் . 
அதை விடுத்து கிரண் தடுக்கி விழுவதும் சுந்தர் சி தாங்கிப் பிடிப்பதும் அப்போது கிரண் தரும் ‘ஜெர்சி பசு மாடு’ எக்ஸ்பிரஷனும் ……
இது போதாது என்று அங்கே வரும் மாயா சிரித்துக் கொண்டே ‘என்ன நடக்குது இங்க ?’ என்று கேட்பதும்… நகைச்சுவை இல்லை . கசப்புச் சுவை . 
சதீஷ் டாவு கட்டும்  லோக்கல் சமந்தா கேரக்டரும் அந்த அலோ அக்காவும் ஒரு நிலைக்கு பிறகு எங்கே போய் விட்டார்கள்?. பின்னால் வரப் போவதே இல்லை என்றால்,
 இப்போது இருக்கிற காட்சிகள் மட்டும் படத்துக்கு எதுக்கு ? 
இரண்டாம் பகுதியில் வரும் அரசியல் காட்சிகள் விவகாரத்தில் இவ்வளவு டி வி நியூஸ் ஷாட்ஸ் எதுக்கு . அவை எல்லாம் filler போலவே இருக்கு ? எனினும் அந்த கடைசி நேர காட்சிகள் அதகள கலகல ரணகளம் . 
kath 5
மாநிலத்தில் செல்வாக்கு இல்லாத — ஆனால் மத்தியில் செல்வாக்கும் அதிகாரமும் உள்ள கட்சியின் பதவி என்பது நிஜத்திலேயே மிக அட்டகாசமான  ஏரியா . 
யாருக்கும் தெரியாத நபராக — கும்பலாக  டெல்லியில் இருந்து  விமானத்தில் வந்து இறங்கி,  ஒரு மைக்கைப் பிடித்து “இன்னும் 15 நாளில் அணு மின் நிலையம் செயல்படும் ” என்று கூறி ,
மாநிலததையே கொந்தளிக்க வைத்து , 
இப்படியே பிரபலமாகி கடைசியில் முதலமைச்சர் பதவி வரை போய்விட்ட ‘நாராயணசாமி’த்தனத்தை முத்துப் பாண்டி கேரக்டரில் ஏற்றி விட்டு இருந்தால் , 
படம் நகைச்சுவையிலும் சட்டயரிலும் இன்னும்  பட்டையைக்  கிளப்பி இருக்கே புரோ . 
அதே போல,  எம் எல் ஏ பதவியை விட எம் பி பதவி பெருசு என்பதில் உண்மை இருந்தாலும்  அதில் ஒரு மாஸ் தன்மை இல்லை . அப்படியே மலையாள நெடி .! 
மாறாக .. ‘ஆயிரம் இருந்தாலும் எம் எல் ஏ பதவிதான்டா கெத்து… நம்ம ஸ்டேட்டுடா.. நம்ம ராஜ்ஜியம்டா … “என்று லோக்கலாக இறங்கி அடித்து படத்தை முடித்திருக்க வேண்டாமா ?
இது மாநில சுயாட்சிக்குக் கோரிக்கைக்கு (கோரிக்கைக்கு மட்ட்ட்டும் )  பேர் போன மாநிலம் புரோ … 
வேங்கட் ராகவன்
வேங்கட் ராகவன்

ஆனாலும் என்ன …

பிரேம் பியூட்டி , கிராண்டியர் எல்லாம் எப்போ வேண்டுமானலும் பார்த்துக்  கொள்ளலாம் .  ஒரு வணிக ரீதியிலான  படம் செய்யும் அறிமுக இயக்குனருக்கு,
 திரைக்கதை வசனமே முக்கியம் என்ற வகையில்,   இயக்குனர் வேங்கட் ராகவனுக்கு மனதாரத் தரலாம்,  ‘வாங்க வாங்க புரோ..’  வரவேற்பு ! 
காமெடி, காதல் . கவர்ச்சி, செண்டிமெண்ட், ,எல்லாம் சேர்த்து ஒரு முழுமையான சபை விருந்து பரிமாறிய வகையில் முத்தின கத்திரிக்கா …  ருசியான கூட்டு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *