எனக்கு இன்னொரு பேர் இருக்கு @ விமர்சனம்

per 4

சென்னை ராயபுரம் பகுதியில்  நைனா என்ற பட்டப் பெயரோடு தாதாவாக இருக்கும் வகையறாவில்,  இன்றைய  நைனாவாக விளங்கும் நபருக்கு (சித்தப்பு சரவணன் )  ஆண் வாரிசு இல்லை . மகள் மட்டுமே . 

வயசாகி விட்டதால்  இனி ரவுடித்தனம் செய்து ஏரியாவை கட்டுக்குள் வைக்க முடியாத நிலையில்,  தன் மகளுக்கு ஒரு மிகப் பெரிய இளம் ரவுடியை திருமணம் செய்து வைத்து, 
மருமகனை ஏரியா நைனாவாக்கி தன் கவுரவத்தை  தக்க வைத்துக் கொள்ளத்  திட்டமிடுகிறார்  அவர் . 
ஆனால் அவரது வலது இடது (அல்லக்) கைகளான நபர்கள் (கருணாஸ் . யோகி பாபு ) , 
ரத்தம் பார்த்தாலே வலிப்பு  மயங்கி விழுகிற ஒரு தம்மாத்துண்டு பையனை (ஜி வி பிரகாஷ் குமார் ) ஒரு பெரிய ரவுடி என்று நம்பி,  கொண்டு வருகிறார்களாம் . 
நைனாவும் அதை அப்படியே நம்பி , அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறாராம் . 
per 8
ஒரு நிலையில் நைனாவின்  தொழில் எதிரிகள் நைனா  குடும்பம் , நண்பர்கள் மற்றும் கூட்டம் என்று எல்லாரையும் போட்டுத் தள்ள முடிவு செய்ய, 
ரத்தம் பார்த்தாலே மயங்கி விழும் அந்தப் பையன் …
 பொங்கி எழுந்து எமோஷனலாக  உணர்சிகரமான , வீரம் நிறைந்த , தன்னம்பிக்கை ஊட்டும் செயல்பாடுகளை செய்து…… 
இப்படி எதாவது செய்து, படம் பார்க்க செல்லும் ரசிகர்களை திருப்தி செய்வார் என்று நீங்கள் நம்பினால் , 
அதற்கு கம்பெனி நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது . 
இப்படியாக…
 per 7
தூர்தர்ஷன்  தமிழ் ஒளிபரப்பு துவங்கிய காலத்தில், 
 தீபாவளி பொங்கலுக்கு செட்டுக்குள்ளேயே எடுத்து எக்கோ அடிக்கும் வசன ஒளிப்பதிவோடு டிராமா போடுவார்களே, 
அந்த  டிராமா கதையை படமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் சாம் ஆன்டன் . 
ஜி வி பிரகாஷ் இன்னும் திரிஷா நயன்தாரா ஹேங் ஓவரில் இருந்து வெளியே வரவில்லை எனினும் உற்சாகமாக ஆடுகிறார் . ஓடுகிறார் . பேசுகிறார் . எனர்ஜி லெவல் அருமை  
per 6
படத்தின் ஹீரோ ஜி வி பிரகாஷ் . ஆனால் கதையின் ஹீரோ சரவணன்தான் . சிறப்பாக நடித்து உள்ளார் . சார்லியும் தன நடிப்பால் அந்த சிறிய கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார் 
எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி பார்ப்பது , ஒரே மாதிரி இளிப்பது .. இதுதான் ஆனந்தியின் நடிப்பு . இதுக்கு நாலு எக்ஸ்பிரஷன்களில் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு ,
அதை எல்லா சீன்களிலும் மாறி மாறி காட்டி விட்டால் போதும் . 
படம் முழுக்க கோமாளி கூத்துகள் இருந்தாலும் சில இடங்களில்தான் சிரிக்கும்படி இருக்கிறது . விஜய் டிவியின் நிகழ்ச்சியை  கிண்டல் அடித்துக் கிழிக்கிறார்கள் 
எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற — தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த தத்துவப் பாடல்களில் ஒன்றான —
per 3 
” கண்ணை நம்பாதே . உன்னை ஏமாற்றும் நீ  காணும் தோற்றம் உண்மை இல்லாதது . அறிவை நீ நம்பு . உள்ளம் தெளிவாகும் ” என்ற பாடலை , சரக்கடித்து விட்டு ஆடும் பாடலாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள் . 
தவிர , ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே’  என்ற சந்திரபாபு பாடலையும் அடித்துத் துவைத்து உள்ளனர் . 
தன் மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் வீட்டுக்கு நைனா போனால் , அங்கே மாப்பிள்ளையின் அம்மா , நைனாவின் பழைய ‘ஆளா’ம்.. அது மட்டுமல்ல நண்பனின் மனைவியுமாம் 
 பின்னர் ஒரு காட்சியில் ஜி வி பிரகாஷ் குமாரே தனது அம்மா தனது மாமனாரின் ஆள் என்பதை,  தனது அப்பாவிடமே சொல்லி சிரிக்க வைக்கிறார் . . கேட்டால் காமெடியாம். 
சுய இன்பப் பழக்கத்தை குறிக்கும் பேச்சு வழக்கு வார்த்தையை வைத்து வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா கேரக்டர்களும் சொல்ல வருகிறார்கள் . கேட்டால் .. காமடியாம் !
per 5
உடலுறவுக்கும் பொருத்தமான ஒரு வார்த்தையை ஒரு காட்சியில் நேரடியாக சொல்கிறார் ஆனந்தி . உடனே ஜி வி பிரகாஷ்குமார் உற்சாகப்பட ,
”நான் அதை சொல்லல” என்று நேரடியாக உடலுறவைப் பற்றி பேசுகிறார் . கேட்டால் .. காமடியாம் 
யாராவது ஈழம், புலி, தமிழ் என்று வசனத்தில் ஒரு வார்த்தை வைத்தால் அதை நீக்கி விட்டே நீட்டிப் படுக்கும் தணிக்கைத் துறை  தகர டப்பாக்கள் , மேற்சொன்ன வார்த்தைகளை எல்லாம் , 
 எந்த ‘பொறை’யை கவ்விக் கொண்டு அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை .
 UA சான்றிதழ் கொடுத்து விட்டால் ஆச்சா ? இதெல்லாம் பெரியவர்கள் துணையோடு சிறியவர்கள் பார்க்கும் விசயங்களா ?
per 1
கடைசியில் எதாவது ஒரு உருப்படியான ஏரியாவுக்கு வருவார்கள் என்று பார்த்தால் , மன்சூர் அலிகான் , பொன்னம்பலம் , நான் கடவுள் ராஜேந்திரன் இவர்களை எல்லாம்,
 கவுரவத் தோற்றத்தில்  போட்டு படம் பார்ப்பவனை அடிக்கிறார்கள் 
ஜி வி பிரகாஷுக்கு ஒரு வார்த்தை . டார்லிங் நடிகனாக நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது . சந்தோசம் . 
திரிஷா அல்லது நயன்தாரா ‘வேறு மாதிரி’ வந்தது. சரி, முடிஞ்சதைப் பேசி பிரயோஜனம் இல்லை . 
அடுத்து வேறொரு வகையான படத்தில் ரசிகர்களைக் கவர்வது மாதிரி ஜெயித்து  இருக்க வேண்டாமா?
இப்படியா சகதியில் புரள்வது ?
எனக்கு  இன்னொரு பேர் இருக்கு ….
per 2 
ரெண்டு பேரு வச்சீங்களே ; கொஞ்சமாவது (நல்ல திரைக்கதை என்னும் ) சோறு  வச்சீங்களா புரோ ‘ ஸ்  ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *