Three is a company production சார்பில் புன்னகைப் பூ கீதா தயாரிக்க, தினேஷ், தீப்தி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கோபி இயக்கி இருக்கும் படம் ‘ நானும் சிங்கிள்தான்’ .
காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியம் உள்ள ஓர் இளைஞனுக்கு ( தினேஷ்) , ஆண்கள் எல்லோருமே மோசம், எவனையும் நம்பக் கூடாது. காதல் கல்யாணம், குழந்தை குட்டி , குடும்பம் இது எல்லாம் வேஸ்ட் வாழ்வில் தொழில் ரீதியான கேர்ரியர்தான் முக்கியம்” என்று எண்ணும் ஒரு பெண் மீது ( தீப்தி) காதல் .
சந்திப்புகள் மோதல் ஆகி, அந்தப் பெண் கிளம்பி லண்டன் போய் விட , நாயகனும் லண்டன் போகிறான் . ஒரு நிலையில் அவள் எடுக்கும் முடிவு .. அதன் விளைவு என்ன என்பதே இந்த படம் .
வெள்ளை வெளேர் பெண்கள், ஆனந்தராஜின் வண்ண மயமான ஒளிப்பதிவு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் நண்பர்களின் லேசான கிச்சு கிச்சு என்று போகிறது படம்.
எண்பதுகளில் வந்த படம் மாதிரியான படமாக்கம்
இறுதியில் கதாநாயகி எடுக்கும் முடிவு ஒரு பக்கம் இருக்கட்டும் . அதில் இருந்து படம் அப்படியே சீரியசாக போய் இருக்கலாம் . கடைசியில் திருப்பம் என்ற பெயரில் பக்கா சினிமாத்தனம்.
இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது . ரொம்ப கவனமாக அதை தவிர்த்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் குழந்தை வேண்டும் என்றால் அநாதை இல்லத்தில் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் மூலம் பல அனாதைகளுக்கு பெற்றோர் கிடைக்கக் காரணமாக இருந்த தமிழ் சினிமா ,
இப்போது அதை விடுத்து ஊசி போட்டுக் கொள்ளச் சொல்வதுதான் வேதனை .
எனினும் ஜாலியான ஒருபயணம்
