‘சிட்டிசன்’ ஷரவணன் சுப்பையாவின் ” மீண்டும்”

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி மணிகண்டன் வழங்க,

அஜித் நடித்துப் மாபெரும்  வெற்றி பெற்று விவாதங்களையும் கிளப்பிய சிட்டிசன், பரபரப்பாப் பேசப்பட்ட ஏ பி சிடி ஆகிய படங்களுக்குப் பிறகு ஷரவணன் சுப்பையா மீண்டும் இயக்கி இருக்கும் படம் …. படத்தின் பெயரும் இதற்குள்ளேயே சொல்லப்பட்டு விட்டது… எஸ் .. மீண்டும் . !

படத்தில் கதிரவன் கதாநாயகனாக நடிக்கிறார் . இரண்டாவது நாயகனாக சரவணன் சுப்பையாவே நடிக்கிறார் .

அனகா என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்பிரமணிய சிவா, கேபிள் சங்கர் ஆகியா இயக்குனர்களும் நடிக்கிறார்கள்.

முக்கியமான கதாபாத்திரங்களில் பிரணவ் ராயன், யார் கண்ணன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, கலைவாணி, துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள் . 

இவர்கள் தவிர மிக வித்தியாசமான பாத்திரங்களில் சுபா பாண்டியன் , அனுராதா நாகராஜன் ஆகிய இருவரை இந்தப் படத்தில் அறிமுகப் படுத்துகிறார் ஷரவணன் சுப்பையா . இவர்களில் அனுராதா நடிக்க அழைத்தபோது சினிமா ஷூட்டிங் எப்படி இருக்கும் என்று கேட்டவராம். “அதனாலோ என்னவோ ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்.  . அதே போல  சுபாவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்” என்கிறார் ஷரவணன் சுப்பையா.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து படத்தைப் பாராட்டி சிலாகித்துப் பேசினார் . ஷரவணன் சுப்பையாவின் கதை சொல்லும் திறமையைக் கொண்டாடினார் . படத்தின் சிறப்புகளை பேசி விட்டு , ”இந்தப் படம் ஷரவணன் சுப்பையாவுக்கு பல வெற்றிக் கதவுகளைத் திறக்கும்” என்று உறுதி கூறினார் . 

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுப்பிரமணிய சிவா, ஸ்டான்லி, கேபிள் சங்கர் ஆகியோரும் ஷரவணன் சுப்பையாவின் திறமைகளை உழைப்பை சினிமா மீதான நேசத்தை மனதாரப் பாராட்டினார்கள் .

கதிரவன் ” இந்தப் படம் என்னை அடுத்த கட்ட வெற்றிகளுக்குக் கொண்டு போகும். காரணம் ஷரவணன் சுப்பையா சார் தான்” என்றார் . 

விரிவாகப் பேசிய இயக்குனர் சரவணன் சுப்பையா, ” இரண்டு பேரோடு வாழ வேண்டிய சூழலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த மீண்டும் . 

ஆனால் ஆபாசப் படம் இல்லை . பெண்ணியம் , மனிதம் குறித்த கேள்விகளை எழுப்பி உறவு சிக்கல்களை உரசிப் பார்க்கும் படம் இது . 

அஜித் நடித்த சிட்டிசன் படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுத்தேன். ஏ பி சி டி படத்தை  அதை வித குறைவான பட்ஜெட்டில் எடுத்தேன் . இது இன்னும் குறைவான பட்ஜெட் தான் . ஆனால் இது மிகப் பெரிய படம் . காரணம் படத்தின் பேசு பொருள் . 

அதற்கு ஏற்ற குழு எனக்கு அமைந்தது . 

கவிப் பேரரசு வைரமுத்துவின் பாடல்கள் படத்துக்குப் பெரும்பலம் . ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக வந்துள்ளது.எடிட்டர் ராஜா முகமதுவின் படத் தொகுப்பு எனக்கு சிறப்பான துணை .

மிகுந்த புகழும் அனுபவமும் கொண்ட சூப்பர் சுப்பராயன் இந்தப் படத்துக்கு சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார் . மிக ரசித்துப் பாராட்டிப் பணி செய்தார். 

என் இயக்குனர் நண்பர்கள் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தனர். ராதிகாவின் நடனம் சிறப்பாக  வந்துள்ளது . 

அனுராதா , சுபா என்ற இருவரை — சினிமா பற்றி எதுவும் தெரியாத- ஐ டி மற்றும் நிர்வாக அலுவலில் இருந்த இரண்டு பெண்களும் மிகச் சிறப்பாக நடித்து அசத்தினார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது .

எல்லோரையும்  சிந்திக்க வைக்கிற விவாதிக்க வைக்கிற நல்ல படமாக இது அமையும் ” என்றார் . 

மீண்டும் மூலம் மீண்டும் வெல்லுங்கள் .. ஷரவணன் சுப்பையா . 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *