வி டி ரதீஷ்குமார் தயாரிப்பில் பிரதாப், சாந்தினி , மூர்த்தி நடிப்பில் எல் ஜி ரவிச்சந்தர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் .
சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராக இருக்கும் ஒருவன் (பிரதாப்) , கிராமத்தில் இருந்து மாநகருக்கு வந்து வழி தவறி நிற்கும் பெண்ணுக்கு (சாந்தினி) உதவ,
அவளை பத்திரமாக கிராமம் வரை கொண்டு விட்டு விட்டு வரப் போக, ஊராரால் தவறாக நினைக்கப்பட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான் .
திருமணம் நடந்து முதலிரவும் முடிந்த நிலையில், அம்மாவின் ஆசைப்படி அம்மா சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனைவியை விட்டு விட்டு வந்து விடுகிறான் . கர்ப்பிணி மனைவி தேடி வந்து விட , அம்மா மற்றும் தம்பிக்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்துகிறான் .
ஒரு பக்கம் அம்மா திருமணத்துக்கு வற்புறுத்த , இன்னொரு பக்கம், படம் இயக்கும் முயற்சியில் வறுமை துரத்த , கடைசியில் என்ன ஆனது என்பதே படம் .
சம்மந்தப்பட்ட இயக்குனரின் சொந்தக் கதை என்கிறார்கள் .
வித்தியாசமான கதை .
பல உருக்கமான காட்சிகள் .
பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன .
யதார்த்தமோ லாஜிக்கோ இருந்திருந்தால் சந்திப்பு இன்னும் தித்திப்பாக இருந்து இருக்கும்