நெஞ்சிலே துணிவிருந்தால் டிரைலர் வெளியீட்டு விழா

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா விழாவில், 

விஷால் பேசும்போது  “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது.

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை.

எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது.

ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன்.

விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்துவருகிறார்.

அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். அவர் மாநகரம் திரைப்படத்தில் கலக்கியிருந்தார்.

அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும்.

படத்தின் நாயகி  மெஹ்ரீனுடன் நான் “ தம்ப்ஸ் அப் “ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.அவரும் வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும். இது என்னுடைய பட விழா போல் உள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் , இசையமைப்பாளர் இமான் , தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் Platformல் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு, 

அவர்கள் தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும். சாட்டிலைட் உரிமையை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை.

அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து, 

பின் வெளியிடலாம். துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது.

அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி,  தங்களுடைய  திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன் . ஒருவர் உழைப்பில் உருவான படத்தை அநியாயமாக முறையின்றி நான் ஆன் லைனில் பார்த்தேன் என்று சொல்வது தவறு .

அது கண்ணியமான செயல் அல்ல . அடுத்தவரின் உழைப்பை திருடும் செயல். ஹெச் ராஜாவாக இருந்தாலும் சரி . வேறு யாராக இருந்தாலும் சரி .

நான் ஒழுங்காக டாக்ஸ் கட்டுபவன் . என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது . பைரசிக்கு எதிரான் என் பணி எப்போதும் தொடரும் ” என்றார் விஷால்.

இசை அமைப்பாளர் இமான்  தன் பேச்சில் ” இங்கு நிகழ்ச்சி தொகுப்பு செய்பவர் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார் .

எனக்கு கூட நமக்கு சம்மந்தம் இல்லாத இடத்துக்கு வந்து விட்டோமோ என்று தோன்றுகிறது . தமிழ்ப் படம் இது . தமிழில் பேச வேண்டும் .

மெர்சல் படத்துக்கு எதிராக பலரும் பேசுவது எல்லாம் பார்க்கிறேன் . ஏதோ ஆதித்யா காமெடி சேனல் பார்ப்பது போல இருக்கிறது . 

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் . தமிழன் என்பதுதான் நம் அடையாளம் . அதை இழந்தால் எல்லாம் போய் விடும் ” என்றார் 

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசிய போது “நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ, 

அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது.

இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். 

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம்.

ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன்.

அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *