காணலாமா ?
சிறு வயது முதலே ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் கொண்டு நெருங்கிப் பழகும் நண்பர்கள் நடராஜ் (ராமகிருஷ்ணன்) மற்றும் ஜான் ஜோசப் (சவுந்தர் ராஜா) இருவரும் .
நட்ராஜுக்கு கல்யாணம் செய்து வைக்க அவனது பெற்றோர முயல, பெண் கேட்டு போன இடத்தில் ஒரு நல்ல பெண்ணின் தந்தை,
தனது பெண் சுமதியை (அமலா) நட்ராஜுக்கு கொடுக்க விருப்பமில்லை என்று கூறி விடும் நிலையில்,
அந்த நல்ல பெண் எப்படியாவது தன் நண்பனுக்கு மனைவியாக வர வேண்டும் என்று விரும்புகிறான் ஜோசப் .
மிகுந்த கஷ்டப்பட்டு அவமானப் பட்டு போராடி அந்த பெண்ணை தன் நண்பன் நட்ராஜுக்கு மனம் முடித்து வைக்கிறான் ஜோசப் .
மணமான நிலையில் நடராஜ் – சுமதியின் முதலிரவு பல காரணங்களால் தள்ளிப் போகிறது . இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஜோசப் மனதில் கள்ளம் புகுகிறது .
அடுத்த நொடி இருவரும் சுதாரித்துக் கொள்கிறார்கள் .
எனினும் நடராஜ் இருவர் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை அவர்களின் மன சாட்சியைக் கொல்கிறது. ஒரு நிலையில் நடராஜ் சுமதி தம்பதியை பிரிய முடிவு செய்கிறான் ஜோசப் .
சுமதிக்கு அது உடன்பாடுதான் என்றாலும் நடராஜ் நேர்மாறாக இருக்கிறான் . ஜோசப்பைப் பிரிந்து வாழவே முடியாது என்ற நிலை .
நீண்ட இடைவேளைக்கு பிறகு நட்பு, காதல், அன்பு, பாசம் , நம்பிக்கை போன்ற விசயங்களை வைத்து ஒரு படம்.
படத்தில் வரும் — பெண்மையைப் போற்றும்படியான காட்சிகள் அருமை
வள்ளலாரின் பெற்ற தாயினை பாடலை படத்தில் பயன்படுத்தியமைக்கும் அதை அவ்வளவு சிறப்பாக படமாக்கி இருப்பதற்கும் கூடுதல் பாராட்டுகள் .
இது தவிர ஈ எஸ் ராம் இசையில் புலமைப்பித்தன் , முத்து லிங்கம் மற்றும் சினேகன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாமே காதுக்கும் கருத்துக்கும் தவிர கண்ணுக்கும் இனிமை
கேரளாவில் பல விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளர் அழகப்பனின் ஒளிப்பதிவு அழகாக இருப்பதோடு , காட்சிகளில் உணர்வுக் கூட்டலுக்கும் பலம் சேர்க்கிறது .
நட்ராஜாக ராம கிருஷ்ணனும் ஜோசப்பாக சவுந்தர் ராஜனும் நன்றாக நடித்துள்ளார்கள் . சவுந்தர ராஜா ஒரு படி மேல் .
புதுமுகம் அமலா பந்தமான முகம் , பக்குவமான முக பாவனைகள் என்று கவனம் ஈர்க்கிறார் .
ஆரம்பத்தில் அவ்வளவு பரிசுத்தமான நல்லவர்கள் என்று பில்டப் கொடுக்கப்படும் நட்ராஸ் சுமதி கேரக்டர்கள் ஒரு நொடி தடுமாறுவது கூட ,கதாபாத்திரச் சீர்குலைவாகவே இருக்கிறது .
அல்லது அதுதான் கதை என்றால் அந்தக் கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் அவ்வளவு கொண்டாடி இருக்கத் தேவை இல்லை . இயல்பாக விட்டிருக்கலாம் .
படத்தின் ஆரம்பக் காட்சிகள் சொல்லும் விஷயங்கள் படி ஜோசப் மற்றும் சுமதி இடையே ஒரு சகோதர பாசம் இயல்பாகவே வந்து இருக்கும் .
அப்படி இருக்க , அந்த ஒரு நொடி சலனத்துக்குக் காரணமான காட்சிகளாக இயக்குனர் சொல்லும் முன் காட்சிகளில் யதார்த்தம் இல்லை .
எனினும் மனித உறவுகள் உணர்வுகள் அடிப்படையில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் கண்ணியமான கவிதை போன்ற படம் ஒரு கனவு போல .






