மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ‘அதர்ஸ்’ – பத்திரிக்கையாளர் சந்திப்பு

 
 

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்தில்   ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர்  படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது ” என்றார். 

ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப்:“ இயக்குநர் அபின் அவர்களின் முதல் படம் போலவே இல்லை — மிக நன்றாக இயக்கியுள்ளார். ஹீரோவுக்கும் இது முதல் படம் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். “என்றார். 

இயக்குநர் அரவிந்த், “நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்யூராக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக் கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார்  மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார்.” என்றார.

இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன்:“நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம்.” என்றார் 

 
கௌரி கிஷன்:“ அபின் சார்  நான் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார் .  அப்போதே காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது.”என்றார். 

நடிகர் ஆதித்யா மாதவன்:“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குனர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 தான் எங்கள் தீபாவளி”என்றார் 

இயக்குநர் அபின் ஹரிஹரன்:“ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம்.  ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். “என்றார்.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *