ஓவியாவை விட்டா யாரு ( சீனி ) @ விமர்சனம்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்க, சஞ்சய் , ஓவியா, ராதாரவி, செந்தில், சரவணன், அருள்தாஸ் நடிப்பில் ராஜதுரை எழுதி இயக்கி இருக்கும் படம் ஓவியாவை விட்டா யாரு ( சீனி ) . படம் எப்படி ? பேசலாம் .

சுயதொழில் செய்து முன்னேற விரும்பும் சீனிக்கு (சஞ்சய்) அம்மா ( மீரா கிருஷ்ணன்) மற்றும் தாத்தாவின் ( டி பி கஜேந்திரன்) ஆதரவு இருந்தும் அப்பாவின் (மனோஜ்குமார்) ஆதரவு இல்லாததால் பலன் இல்லை . சீனியின் காதலி திவ்யா ( ஓவியா ).

 அம்மா , தாத்தா உதவியில் ஆரம்பித்த தொழிலில் ஏமாற்றப்படுகிறான் சீனி . எப்படியாவது சுய தொழில் செய்யும் முனைப்பில் இருக்கும் அவனிடம் அவன் காதலியையே கரெக்ட் செய்து தர சொல்கிறார் ஒரு மளிகைக்  கடைக்காரர் ( சரவணன்).

 இந்த நிலையில் ஆண்மையை அதிகரிக்கும் என்று முட்டாள்தனமாக நம்பப்படும் மண்ணுளி பாம்புக்கு அலையும் ஒரு வங்கி மேலாளர் ( சின்னி ஜெயந்த்),  அதிர்ஷ்டம்  என்ற நம்பிக்கையில் நாகரத்தினக் கல்லுக்கு அலையும் ஒரு கலெக்டர் ( அருள் தாஸ்) , இரும்பை உடைக்கும் என்று நம்பப்படும் சஞ்சீவி குச்சிக்கு அலையும் ஒரு போலீஸ் அதிகாரி ( ரவி மரியா)  ஆகியோரின் ஆசையை பயன்படுத்திக் கொள்கிறான் சீனி .

 இவற்றை எல்லாம் தருவதாக சொல்லி  சீனி உட்பட அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றும் நபர் ( ராதாரவி ) ஒரு நிலையில் தப்பி விட , போலீசிடம் வசமாக மாட்டிக் கொள்கிறான் சீனி . சுயதொழில் செய்து முன்னேற நினைத்த சீனியின் நிலை என்ன ? என்பதே இந்த படம் . 

சுய தொழில் செய்யும் லட்சியம் , மூட நம்பிக்கைகளின் விளைவு போன்றவற்றை எளிமையாக  பேசுகிறது படம் . எம் ஜி ஆர் சிலைக்கு சேவகம் செய்யும் யானை, அதன் பாகனாக நடிகர் செந்தில் !
பல இடங்களில் வசனங்கள் சுவாரஸ்யம் . 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் கரகாட்டப் பாடல் , மற்றும் ரியா ரியா பாடல்கள் சிறப்பு .  சாய் பாரதியின் நடன இயக்கம் எளிமையான இனிமை. 

இளம் நாயகன் சஞ்சய் உற்சாகமாக நடிக்கிறார் . ஓவியா ஒகேவ்யா .  
ராதாரவி கெட்டப் , நடிப்பு என்று சகல விதத்திலும் அசத்துகிறார் .  சரவணன் ஒகே . 

கிராமியப் பின்னணியிலான யதார்த்தமான படம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *