லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவிந்தர் சந்திர சேகர் தயாரிக்க , கவின் ,ராஜு, அருண் ராஜா காமராஜா, ரம்யா நம்பீசன் நடிப்பில் சிவா அரவிந்த் இயக்கி வெளிவந்த படம் நட்புனா என்னன்னா தெரியுமா ?
படம் வெளியான நிலையில் பத்திரிக்கியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது .
நிகழ்ச்சியில் பேசிய கவின் ,ராஜு, அருண் ராஜா காமராஜா, சிவா அரவிந்த், ரம்யா நம்பீசன் அனைவரும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் உழைப்பை, நம்பிக்கையை பெரும் போராட்டத்துக்கு இடையே படத்தை ரிலீஸ் செய்ததை பாராட்டினார்கள் .
கவின் ,ராஜு, அருண் ராஜா காமராஜா, சிவா அரவிந்த், ரம்யா நம்பீசன், ரவீந்தர் சந்திரசேகர் ஆகியோர் , புது குழு என்று பாராமல் ரம்யா நம்பீசன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொன்னார்கள் .
ரவிந்தர் சந்திர சேகர் பேசும்போது , ” புது முகங்களை வைத்து படம் எடுத்தால் இங்கு ரிலீஸ் செய்வது கஷ்டமாக இருக்கிறது .
ஆனால் நான் பெரிய நடிகர்களை விட புது முகங்களை வைத்து படம் தயாரிப்பதையே விரும்புகிறேன் . அடுத்தும் புதுமுகங்களுக்கே வாய்ப்புத் தருவேன் . அதன் மூலம் கண்டிப்பாக வெல்வேன். சினிமா மீது எனக்கு தீராத காதல் ” என்றார் .
நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகரின் பெற்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.