மீடியா ஃபேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும் புதிய படம் “பதுங்கி பாயணும் தல”.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருப்பதாக சொல்லப் படும் இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் மோசஸ் முத்துப்பாண்டி, இயக்குனர் S.A.சந்திரசேகரனிடம் இணை இயக்குனராகவும் இயக்குனர் சீமானிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தவர்
பர்மா படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார் .
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி, சிங்கப்பூர் தீபன்,ராகுல் தாத்தா ,சிங்கம்புலி, ,RNR மனோகர், M.S.பாஸ்கர் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.படத்திற்கு தணிக்கைக்குழு எந்த வெட்டும் கொடுக்காமல் “U” சான்றிதழ் வழங்கி இருக்கிறது .
“மாமனா மச்சானா” என்கிற பாடலை இயக்குனர் S.P.மோசஸ் எழுத, அந்தோணிதாசன் பாடியுள்ளார் .இதன் சிங்கள் டிராக் பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் .
இந்த நிலையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி. ராஜேந்தர் , எஸ் ஏ சந்திர சேகர் ஆகியோர்கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் . பெண் தயாரிப்பாளர் ஆமீனா ஹுசைனை இருவரும் மனமாரப் பாராட்டினார்கள் .
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஆமீனா ஓர் இரும்புப் பெண்மணியாக நின்று படத்தை முடித்ததாக பாராட்டினார் டி. ராஜேந்தர் .
தன் உதவியாளரான மோசஸ் முத்துப் பாண்டியின் வெற்றி தான் விரும்பும் ஒன்று என்றார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் .
“இந்த தயாரிப்பாளர் என் தெய்வம்” என்றார் இயக்குனர் .
ஆமீனா ஹுசைன்
“ஒரு நல்ல படத்தை எடுத்து உள்ளோம் . படம் நன்றாக வந்துள்ளது . எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் ” என்றார் தயாரிப்பாளர் ஆமீனா ஹுசைன் .
திரையிடப்பட்ட பாடல்களில் உற்சாகமாக ஆடிப் பாடி நடித்து இருந்தார்கள் நாயகன் நாயகியான மைக்கேல் மற்றும் நைனிகா இருவரும் .
ராகுல் தாத்தா சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்பது முன்னோட்டத்தில் தெரிகிறது .
ராகுல் தாத்தா
“விரைவில் நயன்தாராவே கால்ஷீட் கேட்கும் அளவுக்கு ராகுல் தாத்தா உயர்வார்” என்றார் எஸ் ஏ சி .
வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்துக் கொண்டு இருந்த வேல ராம மூர்த்தி இந்தப் படத்தில் காமெடி குணச்சித்திர வேடத்தில் நடித்து இருப்பது தெரிகிறது .
ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவில் ,வல்லவன் சந்திரசேகர் இசையில் , மனோஜ்படத்தொகுப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது பதுங்கி பாயணும் தல.
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462