பெரடாக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் வைரமுத்து தயாரிக்க, சந்தோஷ் பிரதாப், மது ஷாலினி , கோகுல், அஸ்வின் , சனா , சீமான், ராஜா, ஜீவா ஹரிணி நடிப்பில் பாலாஜி வைரமுத்து இயக்கி இருக்கும் படம் .
பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் அக்ஷரம் அதாவது பெயர், கொண்டவன் அதாவது சிவா பெருமான் என்பது பொருள் .
மலரும் எழுத்தாளர் , பயணி, இசைக் கலைஞன் , பணக்கார இளைஞன் பணக்கார இளம்பெண் ஐவரும் எதிர்பாராத விதமாக நண்பர்கள் ஆகி , சேர்ந்து ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள் .
அப்போது ஒரு புத்தகத்தை படிகிறார்கள்.
பல்வேறு புத்ககங்களின் பக்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் புத்தகத்தில் எந்த வரி , வாக்கியம் , பத்தி படிக்கப் படுகிறதோ, படிப்பவர் வாழ்வில் படிக்கப்பட்ட அந்த விசயம் அப்படியே நடக்கிறது .
நல்ல வாக்கியம் இருந்தால் நல்லது . தீய வாக்கியம் இருந்தால் கெடுதல் .
இந்த நிலையில் ஐவரில் ஒருவரான அந்த பணக்கார இளம் பெண்ணை சைக்கோ ஒருவன் கடத்த அப்புறம் என்ன நடக்கிறது என்பதே கதை .
எதையுமே பாசிட்டிவ் ஆக பார்க்க வேண்டும் . அப்படி பார்த்தால் பாசிடிவ் ஆக நடக்கும் . நெகட்டிவ் ஆக பார்க்கக் கூடாது . பார்த்தால் நெகட்டிவ் ஆகத்தான் நடக்கும் என்பதை சொல்ல எடுக்கப்பட்டு இருக்கும் படம் .
நல்ல விசயம்தான் .
ஆனால் அதை ” விபத்து நடக்காமல் போக வேண்டும்’ என்று கூட யோசிக்க கூடாது . அதுவே நெகட்டிவ் சிந்தனைதான் . மாறாக் பாதுகாப்பா போகணும் என்று யோசிக்கணும்” என்று இரண்டு முறை கிளாஸ் எடுக்கிறார்கள் .
நன்றாக சொல்லி இருக்கலாம் . ( சிலப்பதிகாரப் பரிச்சயம் இருந்தால் விளையாடி இருக்கலாம் )
செயற்கையான காட்சி அமைப்புகள், நாடகத்தனமான வசனங்கள் ஒரு பக்கம்….
வித்தியாசமான கதை போல ஆரம்பித்து வழக்கமான சைக்கோ பெண் கடத்தல் என்று போனது இப்படி பல குறைகள் .
எனினும் இயக்குனரின் கருத்தியல் நோக்கத்தை பாராட்டலாம்