பாண்டியோட கலாட்டா தாங்கல @ விமர்சனம்

pandi 77

விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் நிதின் சத்யா, ரக்ஷா ராஜ், சிங்கம்புலி , மயில்சாமி, யோகி பாபு ஆகியோர் நடிக்க, 

 எஸ்.பி. குணசேகரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் பாண்டியோட  கலாட்டா தாங்கல . படம் கலாட்டாவா ? கலவரமா? பார்க்கலாம்.

pandi 9
1915  ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் மேன்ஷன் அண்ணாச்சி மேன்ஷன் .
பதினாறு வயதினிலே படத்தில் நடித்த போது ஸ்ரீதேவி தங்கி இருந்த மேன்ஷனாம் அது (இந்த விஷயம் ஸ்ரீதேவிக்கு தெரியுமா?)
pandi 3
ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பல பிரம்மச்சாரிகள் வாழ்ந்து வரும் அந்த மேன்ஷனில் பெரிய சைஸ் பொம்மைகள் விற்றுப் பிழைக்கும் சத்யா (நிதின் சத்யா) , 
ஒன்பது படத்தில் ஹீரோவாக நடித்தும் ஒன்பது படமும் வெளிவராமலேயே  வழுக்கையாகிப் போன நைன் ஸ்டார் நாராயணன் (சிங்கம் புலி) , போலி  டாக்டர் (லொள்ளு சபா சுவாமிநாதன் ).,
pandi 1
நவரத்தினக் கல் போலி ஜோசியர் (குமரேசன்) உட்பட பலவிதமான மனிதர்கள் . 
சத்யாவின் நண்பன் பிக்பாக்கெட்  அடிக்கும் பாபு  (யோகி பாபு ) . சத்யாவின் காதலி யாமினி (ரக்ஷா ராஜ் )
ரக்ஷா ராஜின் ஐந்து ரவுடி அண்ணன்களில் மூத்தவன் வர்மா (லொள்ளு சபா மனோகர்) 
தங்கள் ஐந்து பேரையும் அடித்து வீழ்த்தும் ஒருவனுக்கே தனது தங்கையை திருமணம் செய்து வைப்பேன் என்கிறான் வர்மா,. சத்யாவால் அது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம் . 
pandi 7
மேன்ஷனில் உள்ள பலரும் ஒழுங்காக வாடகை தராத நிலையில் , 
அதை, இடித்து விட்டு வேறு பில்டிங் கட்ட விரும்பும் ஒரு நபருக்கு மேன்ஷனை விற்க முயல்கிறார், அதன்  இன்றைய உரிமையாளர் (இமான் அண்ணாச்சி .)
மேன்ஷனில்  தங்கி இருக்கும் எல்லாரும்  கெஞ்சிக் கேட்டதன் பேரில், 
pandi 33
இனி அங்கு வாடகைக்கு இருக்கும் எல்லோரிடமும் ஒழுங்காக வாடகையை வாங்கித் தரும்  பொறுப்பை , சின்ன வயசு முதல் அங்கேயே வசிக்கும் பாண்டியிடம் (மயில்சாமி) ஒப்படைக்கிறார்,  மேன்ஷன் உரிமையாளர் . 
வாடகை விசயத்தில் பாண்டியை கரெக்ட் செய்யும் முயற்சியில் , சத்யா ,  நைன் ஸ்டார் நாராயணன், பாபு , போலி ஜோசியர் , போலி மருத்துவர், சேர்ந்து  பாண்டிக்கு மது வாங்கித் தர, 
 pandi 55
உயரமான மொட்டை மாடியில் எல்லோரும் அமர்ந்து  மது அருந்தும்போது , பாண்டி தவறி விழுந்து இறந்து விடுகிறான் . 
செத்துப் போன  பாண்டி ஆவியாக வந்து மேன்ஷனில் உள்ள கரடி பொம்மைக்குள் நுழைந்து,
 தன் சாவுக்குக் காரணமான  சத்யா ,  நைன் ஸ்டார் நாராயணன், பாபு , போலி ஜோசியர் , போலி மருத்துவர் உட்பட அனைவரையும் பயமுறுத்துகிறான் . 
pandi 22
பயந்து போன எல்லோரும் பேய் விரட்டும் பக்கிரிசாமியை (மனோபாலா) சந்தித்து உதவி கேட்க , அவர் பாண்டியைப்  பிடித்து கண்ணாடிக்  குடுவையில் அடைத்து தன் வீட்டில் வைக்கிறார் 
அங்கே அது போல் நிறைய ஆவிகள் இருக்க , அவர்களை எல்லாம் விடுவித்துக் கொண்டு மேன்ஷனுக்குப் போகும் பாண்டி , தனது ஆவி குழுவோடு சேர்ந்து மேன்சனில் உள்ள அனைவரையும் மிரட்டுகிறான். 
Paandiyoda Galatta Thangala Movie Stills
இந்த நிலையில் சினிமா வாய்ப்புத் தேடி வந்து அங்கு தங்கி இருக்கும் நடிகை மீது மேன்ஷன் ஓனருக்கு ஆசை . ஆனால் அவள் நைன் ஸ்டார் நாராயணனுடன் நெருக்கமாகிறாள் .
மேன்ஷன் யாருக்கு உரிமை என்பதில் பேய்களுக்கும் மனிதர்களுக்கும் போட்டி வர, 
நடிகை கிடைக்காத ஆத்திரததில் எல்லோரையும் விரட்ட மேன்ஷன் ஓனர் அடியாட்களுடன் வர, அந்த அடியாட்கள் கூட்டத்தில் யாமினியின் ரவுடி அண்ணன்களும் வர , 
மரண கனா  விஜி
மரண கனா விஜி

அப்புறம் என்ன நடந்தது என்பதே  பாண்டியோட  கலாட்டா தாங்கல.

விக்ரமாதித்தனின் வேதாளம் வடிவத்தை ஆவிகளுக்குக் கொடுத்து , அவை பொம்மைகளுக்குள் நுழையும் போது, கரடி உருவம் மற்றும் விட்டலாச்சார்யா ஸ்டைல் பேய் வடிவத்தைக் கொடுத்து, 
இதை வைத்தே குழந்தைகளை —  ரசிகர்களைக் கவர்ந்து விடலாம் என்று….. நம்பி இருக்கிறார்கள் . 
pandi 11
கானா பாலா ‘ செல்போனு .. சிம்கார்டு… ‘ என்று பாடும் பாடல் ஒன்று , மரணகானா விஜி பாடும ‘நீயும் பொம்மை நானும் பொம்மை….’  என்ற  ஒரு பாடலும்……… இருக்கிறது  .
படத்தில் சிங்கம் புலி, மயில்சாமி, யோகி பாபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா, சாமிநாதன், லொள்ளு சபா மனோகர் , குமரேசன் என்று ஏராளமான காமெடி நடிகர்கள் …… இருக்கிறார்கள் . 
pandi 66
பாட்டு , சண்டை , நடனம் எல்லாம் கூட…. இருக்கிறது . 
எல்லாமே அதது பாட்டுக்கு இருக்கிறது . 
கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடிப்பு என்று எல்லா வகையிலும் கனமும் நேர்த்தியும் இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →