ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்க்கெட் அந்தோணி தயாரிக்க மதுனிக்கா, கிரேன் மனோகர், சிசர் மனோகர், ‘பிச்சைக்காரன்’ கார்த்திக், ஆனந்த், அந்தோணி நடிப்பில் சிட்டிசன் மணி இயக்கி இருக்கும் படம் ‘பெருநாளி’
அக்கா இறந்த நிலையில் அக்காவின் மகள்களையும் தம்பியையும் வாழ்வில் கரை சேர்க்க , பால் விற்பனை குத்தகை எடுத்து உழைக்கும் — வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த — எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நாயகன். இன்னொரு அக்காவின் மகளுக்கும் அவனுக்கும் காதல் . ஆனால் மாமாவுக்கு நாயகன் மீது பகை .
பால் குத்தகை விசயத்தில் பகைக்கும் ஒரு அடாவடி ஆளும் அவனது மகனும் !

அக்காள் மகளின் காதல். அதனால் ஏற்படும் சிக்கல்கள் வளர்ந்து அரசியல் , பகை , வரதட்சணை என்று வளர்ந்து நாயகனை பல வகையிலும் மிரட்ட அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த பெருநாளி .
பெருநாளி என்பது ஓர் ஊரின் பெயர் .
உறவின் பெருமையை , உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சொல்லும் படம் .
எளிய படமாக்கல் .
சின்ன சின்ன திருப்பங்கள் .

கடைசியில் பெற்றோரை மதிக்காமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றஅறிவுரை இப்படி கருத்து ரீதியாக நல்ல படம்
நிறைய காமெடி நடிகர்கள் . பல கிராமத்து முகங்கள் . சில ஹா ஹா காமெடிகள் எல்லாம் இருக்கிறது .
பாடல்கள் எளிமையான இனிமை . எம்ஜிஆர் ஜெயலலிதா புகழ் பாடும் பாடல் ஒன்றும் உண்டு
யதார்த்தமான முயற்சி .