ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் தயாரிக்க, பிரஜின், இவானா , சாம்பசிவம், அனுபமா, நடிப்பில் சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இளம்பெண் ஒருத்தியை ஓர் இளைஞன் காதலிக்க, அவனை அடித்து அனுப்புகிறார் பெண்ணின் அப்பா. சில ஆண்டுகள் கழிந்த நிலையில் பெண்ணுக்கு (இவானா வருண்)அவளது அப்பா (சாம்பசிவம் ) மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்க,
அந்த மாப்பிள்ளை கொல்லப்படுகிறான். அப்பாவின் குடும்ப நண்பர் மகன் ஒருவன் அவளோடு பழக அவனும் கொல்லப்படுகிறான். அவள் ஓர் இளைஞனை காதலிக்க அவனும் கொல்லப்படுகிறான்.
விசாரிக்க வருகிறார் ஒரு போலீஸ் அதிகாரி ( பிரஜின்) . கொலைகள் செய்வது யார்? ஏன்? என்பதே படம்.
மிக இயல்பாக விரியும் காட்சிகள். நிதானமான நகர்வு. முதல் பாதிப் படத்தை தாங்குவது நாயகி இவனா வருணின் குழந்தைத்தனமான அழகு..பொருத்தமான தேர்வு
பிராஜின் அந்த கேரக்டருக்கு தைக்கப்பட்ட சட்டை மாதிரி பொருத்தமாக இருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் சாம்பசிவம் இயல்பாக நடித்துள்ளார்.
இடைவேளை சமயம் வரும் போலீஸ் அதிகாரி குறித்த டுவிஸ்ட்டும் கூட பலே . கிளைமாக்ஸ் வித்தியாசமான ஒன்று . எதிர்பாராத ஒன்று.பாராட்டுக்குரிய ஒன்று
கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு, ஹரி எஸ் ஆர் இசை இரண்டும் ஓகே
ஆனால் இது போன்ற படங்கள் எல்லாம் பத்து வருடம் முன்பு வந்திருக்க வேண்டும்.
இப்படி ஒரு துவக்கம் , சில சம்பவங்கள், ஒரு சின்ன இடைவேளை டுவிஸ்ட், ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் என்பது மட்டும் இன்றைய திரையரங்க வெற்றிக்கு போதுமானதாக இருப்பதில்லை.
எனினும் ஒரு நீட் டான சஸ்பென்ஸ் படத்தை வித்தியாசமான கிளைமாக்ஸோடு பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.