பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் சார்பில் சிந்தன் , ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், பால சரவணன், ஆடுகளம் நரேன் , முனீஸ்காந்த் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் பிளான் பண்ணிப் பண்ணனும்.
நண்பனின் ( பால சரவணன்) தங்கை , காதல் கல்யாணம் செய்து கொள்வதற்காக வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போக , அந்தக் கல்யாணத்தை நிறுத்த நண்பனுக்குத் துணையாக போகிறான் நாயகன் ( ரியோ ராஜ்)
அந்தக் காதல் கல்யாணத்தில் மாப்பிள்ளைக்கு உதவும் ஆம்பல் என்ற இளம் பெண் மீது ( ரம்யா நம்பீசன்) , நாயகனுக்கு ஈர்ப்பு. ஆம்பலைக் கல்யாணம் செய்து கொள்ளக் காத்திருக்கும் முறைமாமன் ( முனீஸ்காந்த்) ஒருவன்
ஆம்பலுக்காக மேற்சொன்ன காதல் திருமணத்தை செய்து வைக்கும் பொறுப்பை முறைமாமன் ஏற்க, அதை நிறுத்த ஆம்பலையும் அழைத்துக் கொண்டு நண்பனும் நாயகனும் போக, என்ன நடந்தது என்பதே இந்த பிளான் பண்ணிப் பண்ணனும்.
மலைப்பாங்கான அந்த அழகான லொக்கேஷன் ஈர்க்கிறது . ரியோ இயல்பாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன் ஓகே. படம் கலர்ஃபுல்லாக இருக்கிறது . ஒளிப்பதிவு சிறப்பு . ஆங்காங்கே சில நகைச்சுவை .
வசனத்தைக் குறைத்து திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்