தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தனது முதல் படத்தின் மூலம் அழுத்தமான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.
ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க PTS FILM INTERNATIONAL சார்பில், P.T.செல்வக்குமார் வழங்க, T.S.பொன் செல்வி தயாரிபில் அடுத்து ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் படம் போக்கிரி ராஜா.
படத்தை ”ரோமியோ ஜூலியட்”,நாய்கள் ஜாக்கிரதை மற்றும் ”ஈட்டி” போன்ற வெற்றிப் படங்களை வெளியிட்ட COSMO VILLAGE சிவக்குமார் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இது ஜீவாவிற்கு 25வது படம் .
”தமிழின் முதல் FUN FANTACY படம் என்ற ஜானரில் இந்தப் படம் வருகிறது” என்பதைக் குறிப்பிடுகிறார் இயக்குனர் . “படத்தின் ஆரம்பம் கொஞ்ச நேரம் ஐ டி நிறுவன பின்னணியில் போகிறது . பிறகு வெளியே குதிக்கிறது .
ஐ டி நிறுவன பணியாளர் ஜீவா . ஹன்சிகா கூடவே வேலை செய்பவர் .சிபிராஜ் வேலை இல்லாத ஒரு நபர் . ஜீவாவுக்கும் சிபிராஜுக்கும் பகை . ஒரு நிலையில் அவர் ஜெவாவுக்கும் ஹன்சிகாவுக்கும் விரிசலை உண்டு பண்ணுகிறார் .
அதன் பின்னணியில் ஒரு சமூக பிரச்னையும் இருக்கிறது ” என்று கதையை விளக்கும் இயக்குனர் ,
தொடர்ந்து, ” ஆனாலும் இது முழுக்க முழுக்க காமெடி படம் . ஆரம்பம் முதல் கடைசிவரை சிரித்துக் கொண்டே இருக்கலாம் . தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தைப் போல டெக்னிக்கல் விஷயங்கள் எதுவும் இல்லை .
படத்துக்கு வரும்போது அதை எதிர்பார்க்க வேண்டாம் . ஆரம்பம் முதல் கடைசிவரை சிரிக்க மட்டுமே வாங்க ” என்கிறார்.
“இன்னொரு முக்கிய விஷயம். இந்தப் படத்தில் ஜீவா டாஸ்மாக்கில் உட்கார்ந்து கொண்டு, ‘ மச்சி .. ஒரு குவார்ட்டர் சொல்லேன் என்று சொல்ல மாட்டார் . அவர் குடிக்கவே மாட்டார். தம்மடிக்க மாட்டார் .
சிபிராஜ் மட்டும் கேரக்டரை விளக்க வேண்டியதற்காக தம் அடிப்பார். அது கூட கொஞ்சமாகத்தான் வரும் ” என்கிறார் ராம் பிரகாஷ் .
இந்தப் படத்தில் ஜீவாவும் சிபிராஜும் சேர்ந்து நடிக்கக் காரணம் அவர்களுக்குள் இருந்த உணமையான நட்புதான் என்று ராம்பிரகாஷ் ராயப்பா குறிப்பிட்டிருந்தார் .
ஆனால் படத்தில் ஒரு காட்சியில் சிபிராஜ் அடிக்க ஜீவா உருண்டு போய் விழ வேண்டுமாம் .
“சிபிராஜிடம் அடிவாங்குவதை விரும்பாத ஜீவா விழும்போது அலட்சியமாக விழுந்தார் . நான் அவரிடம் நிஜமாக அடி வாங்குவதை போல ரீயாக்ட் செய்யுங்கள் என்றேன் . சரி என்று சொன்ன ஜீவா அடிவானகுவது போல இயல்பாக விழுந்து விட்டு எழுந்து வந்து சிபிராஜை பதிலுக்கு அடித்து விட்டார் .
கேட்டால் இதுதான் ரியல் ரியாக்ஷன் என்று சொல்ல , சிபிராஜ் கோவித்துக் கொண்டு போய் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை . ” என்றார் . (விஷயம், விவகாரமாக அமையாமல் விளம்பரமாக அமைந்தால் சரிதான்).
“இந்தப் படத்துக்காக கிறிஸ்துமஸ் , நியூ இயற் , பொங்கல் என்று எந்த பண்டிகையும் கூட கொண்டாட நேரமில்லாமல் வேலை பார்த்திருக்கிறோம் ” என்கிறார்கள் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்பும் . ஒளிப்பதிவாளர் அஞ்சி யும் .
“ஜீவாவுக்கு 25 ஆவது படமாச்சே . படத்தில் ஸ்பெஷலாக என்ன வைத்து இருக்கிறீர்கள் ?” என்றால் “அதையும் மனதில் வைத்து இன்னும் நல்ல ஸ்கிரிப்ட் பண்ணி இருக்கோம் ” என்கிறார் ராம் பிரகாஷ் ராயப்பா .
தக்காளி… இவருதான்யா டைரக்டரு !
வெளியாகி இருக்கும் படத்தின் டீசர் அட்டகாசமாக இருக்கிறது (பார்ப்பதற்கு சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=1CxY1pYOqR4)
அதனாலும் சொல்கிறோம் .
நெல்லிக்கா … இவருதான்யா டைரக்டரு !