ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் பொண்ணு என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில் நடித்து , சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சிகளில் பூஜா பலேகர் தனது அற்புதமான மார்ஷியல் ஆர்ட்ஸ் திறமையைக் காட்டி வியக்க வைக்கிறார் . சண்டைக்கு சண்டையும் ஆச்சு. கவர்ச்சிக்கு கவர்ச்சியும் ஆச்சு.
சுதா சந்திரன் நடித்த மயூரி படம் முதற் கொண்டு இது போன்ற படங்களில் இருக்கும் காதல், நம்பிக்கை காதலா தொழிலா என்று வரும்போது நாயகி தொழிலை முதல் இடத்துக்குக் கொண்டு வருவது எல்லாம் இந்தப் படத்திலும் உண்டு . (இந்தப் படத்தில் காதலனா புரூஸ் லீ யா ? யார் ரொம்ப பிடிக்கும் என்பதில் சண்டை வருகிறது)
விரக்தியில் நாயகி ஆடும் அந்த மார்ஷியல் ஆர்ட்ஸ்தனமான நடனம் அருமை விழாவினில் ராம் கோபால் வர்மா பேசியபோது, ” இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப் படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது.
அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர் ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விப்பட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சீனாவில் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.
கோவிட் காரணங்களால் இந்தப் படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ் லியின் எண்டர் தி டிராகன் திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இது என கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்.”என்றார்.
நடிகை பூஜா பலேகர் தனது பேச்சில், “நான் இந்த படத்திற்காக இங்கு வந்ததில் சந்தோசமடைகிறேன். போன முறை நான் சென்னை வந்த போது தற்காப்புக் கலை வீரராக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன். ராம் கோபால் வர்மா சாரின் படத்தில் நான் நடித்தது எனக்கு கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை. இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்பு கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்காக நான் அழைக்கப்பட்ட போது, எனது சண்டை முறைகள் அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சில பயிற்சிகளை செய்தேன். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கியது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குனர் ராம் கோபால்வர்மா சார்தான் எனக்கு எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார். நான் புரூஸ்லி உடைய ரசிகை, படத்திலும் அப்படியொரு கதாபத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். தியேட்டரில் வந்து படம் பாருங்கள். ஆதரவு தாருங்கள் “என்றார்
Guruparan International நிறுவனம் இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு – ரமேஷ்
இசை – பால் பிரவீன் குமார்
எடிட்டிங் – கமல்
கலை இயக்கம் – மதுகர் தேவார
சண்டை பயிற்சி – பூஜா & ராம் கோபால் வர்மா
மக்கள் தொடர்பு – தியாகராஜன்