ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன்,
ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – செந்தில் , ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ் , இசை – அம்ரீஷ்
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டனர் . மூன்று வேட பரத், (அதில் ஒன்று பெண் வேடம்), 
இனியா மற்றும் நமீதா தம்பி ராமையா, ஊர்வசி , சிருஷ்டி டாங்கே ஆகியோர் மிரண்டோ மிரட்டியோ பயமுறுத்துகிறார்கள் .
சிருஷ்டி டாங்கே , பரத் நடிக்கும் – அருவியில் மழை பெய்யும் பாடல் வண்ண மயம். இனிதாவைக் கொண்டாடும் மலைக்கிராம பாடல் ஒன்று கம்பீரம் . 
நிகழ்ச்சியில் பேசிய இசை அமைப்பாளர் அம்ரேஷ் ” ரீ ரிக்கார்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படம் இது . பாடல்களும் இனிமையாக இருக்கும் ” என்றார் .
“பெண் வேடத்தில் வரும் பரத் என்னை விட அழகாக இருந்தார் ” என்றார் சிருஷ்டி டாங்கே
” மிக உழைத்து அருமையாக பரத் நடித்துள்ளார் ” என்றார் இனியா
” மிகுந்த உழைப்பைப் போட்டு இருக்கிறோம் . இனியா மிக சிறப்பாக நடித்துள்ளார் . சிருஷ்டி இனிமையாக நடித்துள்ளார் . 
ஒரு அபார்ட்மென்டையே கிட்டத்தட்ட சுடுகாடாக்கி இயக்குனர் வடிவுடையான படம் எடுத்தார் . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
“சவுகார் பேட்டை படத்தில் செய்த தவறுகளை எல்லாம் சரி செய்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம் ” என்றார் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்
இயக்குனர் வடிவுடையான் தன் பேச்சில் “பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள். 
மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாக நமீதா நடிக்கிறார. இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து,
அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. படம் விரைவில் வெளியாக உள்ளது.” என்றார்