படத்தில் பிரேம்ஜி அமரன் , ராதாரவி, மயில்சாமி , எம் எஸ் பாஸ்கர், பாண்டு , பவர் ஸ்டார் என்று…. நடிகர்களைப் பார்க்கும்போதே தெரிந்து விடும் இது ஒரு நகைச்சுவைப் படம் என்று .
படத்துக்கான பாடல் வெளியீட்டு விழாவை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் நாகா வெங்கடேஷ்
ஆரம்பத்தில் சீரியலில் வில்லனாக நடித்த சுப்பு பஞ்சுவை அதன் காரணமாகவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நல்ல குண கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தயங்கினாராம் அந்தப் படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் . இப்போது இந்தப் படத்தின் மூலம் சினிமாவிலும் வில்லன் ஆகி இருக்கிறார் சுப்பு பஞ்சு .
ஓ மஞ்சு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர வேடத்திலும் நடித்த கவிதா (ஒரு காலத்தில் அர்ஜுனின் எல்லா படங்களிலும் இருப்பார் ) பல வருட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தில் (ஆண்ட்டி டூ ) பாட்டியாக புரமோஷன் ஆகி நடித்துள்ளார்… ஹீரோ நகுலுக்கு பாட்டியாக !
“பிறப்பால் நான் தெலுங்குப் பெண் என்றாலும் தமிழ் நாட்டையும் தமிழ் சினிமாவையும் ரொம்ப நேசிப்பவள் . தமிழில் வாய்ப்பு குறைந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்கே போய் விட்டேன் . தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறேன் . ஆனாலும் தமிழில் நடிக்காதது வருத்தமாகவே இருந்தது. எனவே இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது பாட்டி வேடம் என்றாலும் பரவாயில்லை என்று சந்தோஷமாக ஒத்துக் கொண்டேன் ” என்று கவிதா பேசியபோது , அது கொஞ்சம் கூட போலித்தனம் இல்லாத அடி மனசின் குரலாக ஒலித்தது . வரவேற்கிறோம் கவிதா!
படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள். பாடல்களில் கவர்ச்சி, வெறி கொண்டு விளையாடியது . முன்னோட்டம்நகைச்ச்சுவையாகவும் படத்தில் ஒரு பரபரபரப்பான திரைக்கதை இருப்பது போன்ற உணர்வையும் தந்தது.
தயாரிப்பாளர் செல்வக்குமார் பேசும்போது ” வெகு ஜன மக்களுக்கு பிடிக்கிற மாதிரி படத்தை ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம் . ஜூன் மாதத்தில் படம் வெளியாகிறது” என்றார்
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் .
இந்த நாரதன் கலையகமும் நன்மையில் முடிய வாழ்த்துகள்!