சிவாவுக்கு சிக்கல்…திருப்பதி பிரதர்ஸ் ஆ ??!! தெறித்து ஓடும் ஹீரோக்கள் !

 rajini murugan

ரஜினி முருகன் ஒரு வழியாக தட்டுத் தடுமாறி திக்கித் திணறி ரிலீஸ் ஆகப் போகிறது . (என்னது ? வெள்ளிக் கிழமை வரை உறுதி இல்லையா? அப்படி எல்லாம் சொல்லாதிங்கப்பா பிளீஸ் )

ரஜினி முருகன் படம் துவங்கியபோது முந்தைய வெற்றிகளை கணக்கில் வைத்துக் கொண்டு , ஆறு கோடி சம்பளம் கேட்டாராம் சிவ கார்த்திகேயன் . ஆனால் படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் , இழுத்துப் பிடித்து அடித்து வளைத்து ஒரு கோடி ரூபாய் சம்பளத்துக்கு  சிவா கார்த்திகேயனை ஒத்துக் கொள்ள வைத்தார்களாம். 

”வருத்தப் படாத வாலிபர் சங்கம் தந்த பொன் ராமுடனான வெற்றிக் கூட்டணி , திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும்ம் பெரிசு . இதுவும் சீக்கிரம் வந்து வெற்றிப் படம் ஆகட்டும் ; அடுத்த படத்தில் சம்பளத்தில் பலம் காட்டிக் கொள்ளலாம்” என்று எண்ணி, ஆறில் ஒரு பங்கு சம்பளத்துக்கு  நடிக்க ஒத்துக் கொண்டார் சிவ கார்த்திகேயன் . 

படம் முடிந்தும்,, திருப்பதி பிரதர்ஸின் முந்தைய திருவிளையாடல்களால் சிக்கி சீரழிந்து நொந்து நூலாகி அழுகி ஒழுகி , இப்போதுதான் ஒரு வழியாக திரைக்கு வருகிறது ரஜினி முருகன் . 

படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் நஷ்டத்தை சரி செய்ய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு தர்ம சேவையாக பணம் தர வேண்டும் என்று முடிவானதாம் . 

அங்கே தான் சிவ கார்திகயனை பைத்தியக்காரராக  ஆகி இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் ! 

எப்படி ?

“உங்க பங்குக்கு நீங்க ஏழு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படம் ரிலீஸ் ஆகும் . உங்களுக்கு நாங்க பேசின சம்பளம் ஒரு கோடி ரூபாய் . அத கழிச்சுக்கிட்டு மீதி ஆறு கோடி ரூபாய் கொடுங்க ‘ என்று கேட்டார்களாம் . 

அடப் பாவிகளா என்று பொங்கி நொந்து எழுந்த சிவா ” பேசின சம்பளம் ஒரு கோடி . உங்களால ஒன்றரை வருஷம் வீணாப் போச்சு . இதுல நான் ஆறு கோடி தரணுமா ?  இது நியாயமா ? தர்மமா ? அடுக்குமா ? ” என்று மானசீகமாக மண்ணை வாரித் தூற்றிவிட்டு (மழை பெய்து சேறும் சகதியுமாக இருப்பதால் ,நிஜ மண் கிடைக்கலையாம் ) , ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டு வந்து விட்டாராம் . 

விஷயம் அறிந்த ஹீரோக்கள் கிடுதாக்கிப் போய் இருக்கிறார்கள் .

மேனேஜரை கூப்பிட்டு திருப்பதி பிரதர்சில் இருந்து யார் வந்தாலும் நான் சினிமா இண்டஸ்ட்ரிய விட்டே போயிட்டேன்னு சொல்லிடு ” என்று தகவல் சொல்லி வைத்து விட்டார்களாம்.

நல்லதுக்குக் காலம் இல்ல . நல்லவனுக்கும் மரியாதை இல்ல .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →