R.I.P.?@ விமர்சனம்

rip 3

மலேசியத் தமிழ் சினிமா என்பது கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வளர்ந்து வரும் துறை .

மலேசியத் தமிழர்களுக்காக தயாரிக்கப்பட்ட வெண்ணிற இரவுகள் படம் பலரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில்

Fenomena Seni Produksi (M) Sdn Bhd தயாரிப்பில் எஸ்.டி.பாலா, சுலோச்சனா தேவி, தமிழரசி தனபாலன், சுசானா, சிவாஜி, வேனுமதி பெருமாள், நந்தகுமார், நவீன், சுந்தரா, ராமசுந்தரம். ஆகியோர் நடிக்க ,

S.T.பாலா கதை, திரைக்கதை, வசனம்,எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் படம் R.I.P.?

ஒளிப்பதிவு-சதீஷ் B.சரண், இசை-ஜெய்ராகவேந்திரா, லவ் தீம்-ஸ்டான்லி ராய், எடிட்டிங்-முத்துராஜ் அருணாச்சலம்.

எப்படி இருக்கிறது இந்த R.I.P.? ?  பார்க்கலாம் .

rip 2'

பிசினசில் பரப்பாக இயங்கும் நடுத்தர வயது மனிதர் ஒருவர் (எஸ் டி பாலா ) சட்டென்று சாலையில் சரிந்து விழுந்து மாரடைப்பால் இறக்கிறார் . பிணம் வீடு போகிறது .

இரண்டு மகள்களையும் மனைவியையும் விட்டு விட்டு அவர், எதிர்பாராத வயதில் செத்துப் போயிருக்க, குடும்பமே உடைந்து கதறுகிறது

அவர் உடல் உறுப்புகளை தானம் செய்திருக்க அவை எடுக்கப் படுகின்றன . மருத்துவமனை மனைவியை பாராட்டுகிறது . அவரைப் பார்க்க ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணியும் அவளது மகனும் வர ,

இறந்தவருக்கும் விதவைப் பெண்மணிக்கும் கள்ள உறவு இருந்ததாக எல்லோரும் பேச, அந்த பெண்மணி அவர்களைக் கண்டித்து ‘எனக்கும் அவருக்கும் இருந்தது சகோதர பாசம்தான் ‘  என புரிய வைக்கிறார்

இறந்தவரின் தம்பி குடித்து விட்டு சொத்தில் என் பங்கை இப்பவே தரனும் . அண்ணனின் ஓய்வூதிய வைப்பு நிதியும் எனக்கே வேண்டும் என்று தகராறு செய்கிறான் .. சாப்பாடு ருசியாக இல்லை என சத்தம் போடுகிறான் .

rip 1

இழவு வீட்டுக்கு வந்திருக்கும் உறவுகள் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள் .

உறவுகளில் ஓர் மாமன் மகள் , அத்தை மகனுக்குள் காதல் இருக்க, அந்த மாப்பிளையை பெண்ணின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை , ஆனால் அவனை இன்னொரு அததைப் பெண் விரும்புகிறாள் .

இவற்றை எல்லாம் இறந்தவரின் ஆன்மா பார்க்கிறது . தனது தவறுகளுக்காக  வருந்துகிறது .

இப்படியாக வீட்டில் இருந்து பிணம் காடு நோக்கிக் கிளம்புவது வரை நடக்கும் சம்பவங்களே இந்த R.I.P.?. படம்

பொதுவாக R.I.P. என்பதை  ஆன்மா சாந்தி அடையட்டும் என்ற பொருள் கொண்ட Rest In Peace என்ற வாக்கியத்தில் சுருக்கமாகத்தான் பயன்படுத்துவார்கள் .

ஆனால் படத்தின் டைட்டிலில் அதற்கு  Representing Innwr Pain என்ற இன்னொரு புது விளக்கம் கொடுத்துப் பயன்படுத்திய வகையிலேயே மனம் கவர்கிறார் இயக்குனர் மற்றும் நடிகர் .

rip 5

தன் உயிர் போன நொடியில் இருந்து, பிணமாக வீட்டில் இருந்து கிளம்பும் வரையில் நடக்கும் சம்பவங்களே கதை என்பதே ஒரு சுவாரஸ்யமாக விஷயம்தான் .

ஆனால் அதிலேயே திருப்தி அடையாமல் இயக்குனர் நோக்கும் இன்னொரு கோணம் அபாரமானது .

உதாரணமாக இறந்து போனவரின் ஆன்மா சிறுமியான தனது மகளிடம் “உன்னுடன்  எல்லாம் நேரம் செலவழித்து பாசம் காட்டக் கூட செய்யாமல் வேலை வேலை என்று இருந்துவிட்டேன் ” என்று கதறுகிறது

” உங்க வருங்காலத்துக்காக இன்சூரன்ஸ் கூட எடுக்காமல் விட்டு விட்டேன்” என்று மனைவியிடம் உருகி மன்னிப்புக் கேட்கிறது

“லேசாக நெஞ்சு வலி வந்தபோதே ஆப்பரேஷன் செஞ்சுக்கன்னு நீ  சொன்ன . நான்தான் கேக்கல . இப்படி திடீர்னு சாவேன்னு நான் யோசிக்கலயே ” என்று மனைவியின் அண்ணனிடம் புலம்புகிறது

rip 4

“உடம்பைப் பார்த்துக்கோ . வெளியில கண்டதையும் சாப்பிடாத . உடற்பயிற்சி பண்ணு’ன்னு அடிக்கடி நீ சொல்வ . நாந்தான் கேட்காம போயிட்டேன் ” என்று நண்பனிடம் நெகிழ்கிறது

ஆனால் அவர்கள் யாருக்குமே இந்த ஆன்மா பேசுவது கேட்காது .

இத ஏரியாதான் படத்தின் மகுடம் .

நிச்சயமாக இந்தப் படம் பார்க்கும் எல்லோருமே தமக்காக இல்லாவிட்டாலும் தாம் நேசிக்கும் தமது குடும்பத்துக்காக மட்டுமாவது ஆரோக்கியம் பேண வேண்டும் என்று யோசிப்பார்கள் .

அல்லது தமது வீட்டு குடும்பத்த லைவனுக்கு புரிய வைப்பார்கள்  அருமை சிறப்பு பாராட்டுகள்

தவிர மரண வீடுகளில் வெளிப்படும் புதிய குணங்கள் , உறவுச் சிக்கல்கள் இவற்றை சிறப்பாகப் பிரதிபலிப்பதோடு , தேவை இல்லாத சடங்குகளை கிண்டலாக சாடும் வகையிலும் பாரட்டுக்குரிதாகிறது படம் .

மலேசியவில் மட்டுமல்ல , தமிழ் நாட்டிலும் ரிலீஸ் செய்ய வேண்டிய படம் இது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *