சட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..!

‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும்,
 
சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு
 
விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ‘சட்டக்கதிர்’ இதழுடன் இணைந்து லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்தியது. 
 
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ‘சட்டக்கதிர்’ ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன்,
 
இந்திய மாநில உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில ஆட்சிமொழிகள் கூடுதல் வழக்கு மொழியாக வருவதற்கு தான்  ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
 
(கூடுதல் வழக்கு மொழி என்பதே மாநில ஆட்சி மொழிக்கு அவமானம்தான் புரோகிதரே!)
 
தொடக்க விழாவிற்கு தலைமையேற்ற மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் சட்டக்கதிரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். 
 
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி  டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்களுக்கு நீதித் தமிழ் அறிஞர் விருதினை ஆளுநர் வழங்கினார்.
 
முழுநாள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநில மொழிகள் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்துதல்,
 
நீதித்துறை நிர்வாகமும்  தீர்ப்புகளை வழங்குதலும், இந்திய அரசமைப்பில் இசைவு பட்டியலும் மத்திய மாநில அரசு உறவுகளும்
 
போன்ற தலைப்புகளில் சட்ட வல்லுநர்கள் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
 
நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விமலா அவர்கள்
 
தமிழ் மொழி சட்ட மொழியாக்க வேண்டியதின் தேவையை வலியுறுத்தினார்.
 
சட்டத்தமிழ் மாமணி , சட்டத்தமிழ் மணி  விருதுகளை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் சட்டக்கதிர் இதழின் சேவையை பாராட்டினார்.
 
“தமிழ்  பெரும் பாரம்பரிய மிக்க மொழி. கலாச்சார ரீதியாக தமிழ் சிறப்பான மொழி. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் தெரியும்.
 
நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நிச்சயமாக தமிழ் மொழியை அதிகம் கற்பேன். தமிழ் இலக்கியங்களை படிப்பேன்.
 
நான் பிறந்த வீடு ஓரிடமாக இருந்தாலும் தமிழ்நாடு எனது இன்னொரு வீடு. ” என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.
 
விழாவில் ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் லிப்ரா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களும் கலந்துகொண்டார்.
 
நிகழ்ச்சியில் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அனைவரையும் வரவேற்றார். 
 
நிகழ்ச்சியில் திரு. டேவிட், திரு. கே. துரைசாமி,  திரு. ஆர் வி தனபாலன், திரு எம் முத்துவேலு, திரு கே பாலு  ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
 
பாப்பா … கவனம் !

சென்னை உயர் நீதி மன்றத்துக்கு தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்று பெயர் மாற்றுவது ,  அதில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்குவது , 

 
பெண்களுக்கு சொத்துரிமை என்ற ஏட்டுச் சுரைக்காய் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது…
 
போன்ற விசயங்களை இந்த கருத்தரங்குகள் இன்னும் உருப்படியாக விவாதித்து இருக்கலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *