பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில் ‘

 sila-2
‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் டாக்டர் கணேஷ் மற்றும் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து  தயாரித்து இருக்கும்  படம்  ‘சில சமயங்களில்’ 
 பிரகாஷ் ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரங்களிலும், வருண் மற்றும் சண்முகராஜன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். 
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம்,  74 வது  கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது…
sila-1
பாடல் எதுவுமின்றி உருவாக்கப்பட்டிருக்கும் ‘சில சமயங்களில்’   23 நாட்களில் படமாக்கப்பட்டது. 
ஆனால்  ‘இசைஞானி’ இளையராஜாவின் நெஞ்சை வருடும் பின்னணி  இசை இருக்கிறது .
எழில் மிகு காட்சிகளை யதார்த்தமாக படமாக்கும் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர், புகழ் பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில்
மற்றும் படத்தொகுப்பாளர் பீனா பால் என பல சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்கள் ‘சில சமயங்களில்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. 
sila-4
“ஞானமும், திறமையும் ஒருசேர பெற்ற ஒரு உன்னதமான படைப்பாளி, இயக்குனர் பிரியதர்ஷன். கோல்டன் குளோப் விருது மட்டுமின்றி,  
அதற்கு மேல் இருக்கும் அனைத்து விருதுகளை பெறும் தகுதியும், திறமையும் பிரியதர்ஷனுக்கு   இருக்கிறது…உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது…
அதற்கு காரணம் பிரியதர்ஷன்…. தமிழ் சினிமாவிற்காக  ‘சில சமயங்களில்’ திரைப்படத்தை அர்ப்பணிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்…” என்று உற்சாகமாகக் கூறுகிறார் பிரகாஷ் ராஜ். 
sila-3
“திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது….
மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது….’காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு
என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையாக உருவானதே ‘சில சமயங்களில்’…என்கிறார் இயக்குனர்  பிரியதர்ஷன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *