திரி @ விமர்சனம்

thiri 1

ஆர் பி பால கோபி – ஏ கே பால முருகன் தயாரிப்பில் அஸ்வின், சுவாதி, ஜெயப்பிரகாஷ், ஏ எல் அழகப்பன் நடிப்பில்,

அசோக் அமிர்தராஜ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் திரி . வெடிக்குமா ? புஸ்வாணமா ? பார்க்கலாம் . 

ஒழுக்கம் மற்றும் நல்ல  பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அப்பாவுக்கு (ஜெயப்பிரகாஷ்) மகனாகப் பிறந்து, சரியாக நடந்தும் அவரை திருப்திப் படுத்தும் அளவுக்கு நடந்து கொள்ள முடியாத ,
ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவனுக்கு  (அஸ்வின்) , அப்பாவின் நண்பரின் மகளான பக்கத்து வீட்டு இளம்பெண் (சுவாதி) மீது காதல் !
thiri 2
பொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட ஒருவன் தன் தப்பையும் மீறி அதற்காக நாயகனை  கெட்ட வார்த்தையால் திட்ட , அவனை அடிக்கிறான்  நாயகன் .
அதை அடிபட்டவனின் மனைவி பார்த்து விடுகிறாள் . தன் மனைவி முன்பு அசிங்கப்பட்டதாக கொந்தளிக்கும் அவன்தான் ,
நாயகன் படிக்கும் கல்லூரியின் தாளாளர் மகன் . தாளாளரோ (அழகப்பன்) பழந்தின்னு கோட்டை போட்ட ஒரு பக்கா அரசியல்வாதி .
அடித்ததைக் காரணமாக வைத்து நாயகன் படிப்பை முடிக்கும்போது அவனது நடத்தைச் சான்றிதழில் கெட்டவன் என்று போட்டு விடுகிறார்கள் .
thiri 6
அப்பா ரொம்ப வருத்தப் படுவாரே என்று வருந்தும் நாயகன் , அரசியல்வாதியை பார்த்து நியாயம் கேட்கப் போக, 
அவரும் மகனுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் . அரசியல்வாதியின் ஆட்களை நாயகன் அடிக்க , பிரச்னை பெரிதாகிறது . 
அரசியல்வாதியும் அவரது மகனும் பல்வேறு பலங்களோடு மோத, அறிவாளி நாயகன் அதை சமாளித்து வெல்வதோடு ,
கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு பணத்தை மீட்டுத் தருவது எப்படி ?
அரசியல்வாதிக்கும் அவரது மகனுக்கும் நாயகன் மேல் இருந்த மிருகப் பகை உணர்ச்சியின் விளைவு என்ன?
–  என்பதே இந்தப் படம் .
thiri 5
புதிய படம் , புதிய தயாரிப்பாளர் , புதிய இயக்குனர் ஏதாவது நல்லது சொல்லி பாராட்டுவோம் என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடினாலும் கிடைக்கலியே . 
என்ன பண்ண ?
 ஆங். ஜெயப்பிரகாஷ் அப்பாவாக நன்றாக நடித்துள்ளார் .
கேரக்டரை உணராமல்  சூழலுக்கும் சம்மந்தம் இல்லாத வகையில்  அஸ்வினின் நடிப்பு , காமா சோமா சுவாதி , கடுப்பேத்தும் அனுபமா குமார் (நாயகனின் அம்மா ) என்று…. முடியல பாஸ் . 
அரசியல்வாதியாக ஏ எல் அழகப்பன் தோற்ற அளவில் ஒகே . ஆனால் பல இடங்களில் செயற்கையான  நடிப்பு 
thiri 7
அவரின் கையாளாக வரும் சென்றாயன் படம் முழுக்க காமெடி என்று நினைத்துக் கொண்டு என்னவோ பேசுகிறார் . ஆனால் நைட்ரஜன் ஆக்சைடை முகர்ந்தால் கூட சிரிப்பு வராது . 
தேவை இல்லாமல் நீளும் காட்சிகள் , இந்தப் படத்தில் படத் தொகுப்பு என்று ஒரு விஷயம் உள்ளதா என்று யோசிக்க வைக்கிறது . 
அனுபவப்பட்ட தயாரிப்பு நிர்வாகியான பால கோபி தயாரிப்பாளராக மாறிய நிலையில் எப்படி இப்படி ஒரு படத்தை தயாரித்தார் என்று ஆச்சர்யக் கேள்வியே மிஞ்சுகிறது .
திரி … நமத்துப் போய்….! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *