உதயமாகி இருக்கிறது, அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் ’எஸ்.கே.எம் சினிமாஸ்’

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களைத்  தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை உருவாக்க நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் .
 
இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன்னை நிரூபித்திருக்கிறார். சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக் கொண்டவர்,  எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
 
வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பு செய்கிறார். மக்கள் தொடர்பாளர்களாக தர்மதுரை & சுரேஷ் சுகு பணியாற்றுகிறார்கள்.
 
ஐந்து இளைஞர்களாக தமிழ் சினிமாவின் கவனத்தை  ஈர்த்திருக்கும்,  வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.
 
எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான ‘புரொடக்‌ஷன்ஸ் 1’ துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. 
 
இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு எஸ்.கே.ம் சினிமாஸ் நிறுவனத்தையும், படக் குழுவினரையும் வாழ்த்தினார்கள்.
 
”சிக்கனமாக செலவழியுங்கள்” என்றார்  கலைப்புலி எஸ் தாணு. அதை வழி மொழிந்ததோடு  ”படம் முடித்து விளம்பரச செலவு வரை திட்டமிடுங்கள்” என்றார்  இயக்குனர் கவுதம் ராஜு 
 
”கதைத் திருட்டுக்கு இடம் கொடுக்காதீர்கள்” என்றார் இயக்குனர் சாய் ரமணி 
 
தமிழ் ராப் பாடி வாழ்த்தினார் ஐக்கி பெர்ரி 
 
‘முதல் படமே எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் நாயகன் அகிலுக்கு நன்றி ” என்றார் இயக்குனர் விஜய் ஆனந்தன் 
 
நிறுவனத் தயாரிப்பாளரும் நாயகனுமான அகில், ” நல்ல கதைகள் ஆக்கபூர்வமான படங்கள் சமூகத்துக்கு பலன் தரும் படங்களை தயாரிக்க இருக்கிறேன் . புதிய இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வாய்ப்புக் கொடுப்பேன்” என்றார் . 
 
அகிலம் புகழ , வாழ்த்துகள் அகில் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *