அன்னம் மீடியாஸ் சார்பில் அன்னக்கிளி வேலு தயாரிக்க, கார்த்திகேயன் வேலு, சஞ்சனா பர்லி, கிஷோர் , முகில் நடிப்பில் ஈஸ்வர் கொற்றவை எழுதி இருக்கும் படம் சூ மந்திரக்காளி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்காளி பங்காளிகள் மட்டுமே நிரம்பிய கிராமம் ஒன்றில் ஒருவர் மீது ஒருவர் பொறமைப் பட்டு அடுத்தவர் கஷ்டத்தைக் கொண்டாடும் மன நிலைக்கு எல்லாரும் போய் விட , அந்த குணத்தை மாற்ற விரும்புகிறான்
வித்தியசமான சக்திகள் , வழிபாட்டு முறைகள் , மந்திரவாதிகள், பேய்கள், மலைகிராம பெண் நினைத்தால் அதை மாற்ற முடியும் என்று தெரிகிறது .
ஒரு காதல் ஜோடியின் பிரிவுக்கு காரணம் ஆனதால் கிராமத்தில் யாருக்கும் வாரிசு உருவாகாதது மட்டுமல்ல , அந்த மலைக்கிராமத்தில் இருக்கும் பாடும் இசை மரம் ஒன்றும் தன் இசையை நிறுத்தி விடுகிறது .
எனவே காதல் ஜோடி என்று யார் வந்தாலும் அடைக்கலம் தருவது அந்த மலைக்கிராம மக்களின் வழக்கம் . எனவே நண்பனுக்கு பெண் வேடம் போட்டு காதல் ஜோடி என்று சொல்லி கிராமத்துக்குள் நுழையும் நாயகனின் லட்சியம் நிறைவேறியதா ? மலைக்கிராம சாபம் நீங்கியதா என்பதே இந்தப் படம் .
மலைக் கிராமம் , வித்தியாசமான கேரக்டர்கள், வித்தியாசமான கேரக்டர்கள் , என்று வைத்துக் கொண்டு காமெடிக்கு முயன்று இருக்கிறார்கள் . கதாபாத்திரப் பின்னணிகள் சிறப்பு .
எளிய கிராமத்து முகங்கள் படத்துக்கு பலம் .
அமெரிக்க ஐ டி வேலையை விட்டுவிட்டு பேய் ஓட்டும் பரம்பரைத் தொழிலை செய்ய வரும் கதாபாத்திரம் எல்லாம் படத்தில் இருக்கிறது
பல பெரிய கதாபாத்திரங்களை விட சிறுமிகள் குருவி அருவியாக வரும் நிரஞ்சனா , தன்யா சிறப்பு
எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் பெண் வேடம் போட்டு காதலியாக நடிக்கும் நண்பராக நடிக்கும் கிஷோர் தேவ் . பல காட்சிகளில் படத்தில் வரும் நிஜ பெண்களை விட அழகாக தெரிகிறார் . உழைப்புக்கு பாராட்டுகள்
முன்டாசுபட்டி படம் மாதிரி முயன்று இருக்கிறார்கள் . வித்தியாச முயற்சி
