* அறுபது கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தோழா
* மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் சுனில் பாபு , இந்தப் படத்திலும் தயாரிப்பு வடிவமைப்பாளராக ,
கலாபூர்வமாக பணியாற்றி படத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளார் என்கிறது படக் குழு .
* கார்த்தியும் தமன்னாவும் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிக்கும் படம் இது. இசை கோபி சுந்தர் . ஒளிப்பதிவு. மனம் தெலுங்கு படப் புகழ் பி எஸ் வினோத் .
* படத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு கார் பந்தயக் காட்சியை, உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களான ட்ராய், மிஷன் இம்பாஸ்சிபிள் போன்ற படங்களுக்குப் பணிபுரிந்த புகழ் பெற்ற சண்டை இயக்குனரும் ,
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைச் சேர்ந்தவருமான Kaloian vodenicharov உலகத் தரத்தில் படமாக்கிக் கொடுத்துள்ளார் .
பெல்கிரேட் நகரில் இந்தக் காட்சி தொடர்ந்து பத்து நாட்கள் படுவேகமாக பயணிக்கும் கார்களை வைத்து எடுக்கப்பட்டது .விஜய் நடிக்கும் தெறி படத்திலும் இவர் பணி புரிந்து இருக்கிறார்