அப் பீட் பிக்சர்ஸ் சார்பில் வி ஆர் வி குமார் தயாரிக்க, தர்ஷன் , லால் , சுஜித் , முனீஷ்காந்த், அருள் டி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் கவுதமபம் கணபதி இயக்கி இருக்கும் படம்.
தேர்தலை ஒட்டி பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒப்படைக்கப்படுகிறது. துப்பாக்கியை வாங்கி வைக்கும் நல்ல மனிதரான போலீஸ்காரர் அதை தொலைத்து விடுகிறார். துப்பாக்கியை கண்டு பிடிக்கும் பணியில் துணை ஆய்வாளர் (தர்ஷன்) ஈடுபடுகிறார்.
நான்கு நாட்களுக்குள் காணமல் போன துப்பாக்கியை கண்டு பிடிக்கும் கட்டாயம் இருக்கும் அவருக்கு ரவுடி ஒருவனால் பிரச்னை ஏற்படுகிறது . இரண்டையும் எப்படி அவர் சமாளிக்கிறார் என்பதே படம் .
இந்த வாரம் வந்திருக்கும் படங்களில் இயல்பான எளிய விஷயத்தை சிறப்பாக குழப்பமில்லாமல் சொல்லும் படம் என்று இதை ஒப்புமை ரீதியாக கூறலாம். எதிர்பாராத பிரச்னைகள், காவல் துறைக்கு இருக்கும் சிக்கல்கள், பிரஷர்கள் , அதிகாரிகளுக்குள் இருக்கும் பாலிடிக்ஸ், நல்ல அதிகாரிகளுக்கு எதிராக தவறான அதிகாரிகள் செய்யும் செயல்கள், ரவுடிகள் தொல்லை என்று போகும் படம்.
எஸ் ஐ கேரக்டருக்கு தர்ஷன் பொருத்தம்.
ரவுடியாக வரும் சுஜித் ஓவராக இருந்தாலும் கவனிக்க வைக்கிறார், முனிஷ்காந்த் புன்னகைக்க வைக்கிறார் .
ஒளிப்பதிவும் படத் தொகுப்பு வழியேயான திரைக்கதையும் சிறப்பு.
பின்னணி இசையும் சிறப்பு,
திரையரங்குக்கு உரிய படமாக இல்லாமல் மெதுவாக நகரும் ஒரு நாவலைப் படிக்கும் உணர்வு மட்டும் ஏற்படுவதை தவிர்த்து இருக்கலாம், ‘
மொத்தத்தில் சரண்டர் .. ஆகலாம்,
