சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ், ஃபார்ச்சுன் ஃபோர் கிரியேஷன்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் ஸௌஜன்யா தயாரிக்க, விஜய்கவுண்டரகொண்டா சாரி தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய படத்தின் தமிழ் வடிவம்.
1920 தெலுங்குப் பழங்குடிக் கூட்டம் ஒன்றுக்கும் பிரிட்டிஷாருக்கும் நடக்கும் போரில் , பழங்குடிக் கூட்டத்தின் ஒரு பகுதி தப்பி இலங்கை கடலோரத்தில் இருக்கும் ஒரு ஆளில்லா தீவுக்குள் தங்கி வாழ ஆரம்பிக்கிறது . சுதந்திரம் வாங்கிய பிறகு தெலுங்கு தேசமும் அவர்களைக் கைவிட அங்கேயே அவர்கள் நீடித்து வாழ்கின்றனர்.
அவர்கள் இலங்கை சிங்கள மக்கள் தமிழ் மக்கள் இருவருக்கும் பயந்து வாழ வேண்டி இருக்கிறதாம் . பின்னாளில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் யாழ்ப்பாணம் போதைத் துறைமுகம் ஆகிறதாம் .ஈழத் தமிழர்கள் எல்லோரும் போதைப் பொருள் கடத்தல் உட்பட பல கடத்தல்களை செய்யும் பிக் ஷாட்டுகளாம்.
இந்த நிலையில் இப்போது ஆந்திராவில் கான்ஸ்டபிளாக இருக்கும் ஒருவன் நேர்மையாகவும் துணிச்சலாகவும் அதே நேரம் சமயோசிதமாகவும் செயல்பட . இலங்கையில் ஓர் அண்டர் கவர் ஆப்பரேஷன் செய்ய இவனை அழைக்கிறார் ஓர் உயர் அதிகாரி.
இவன் மறுக்க, ”சிறுவயதில் இருந்து நீ தேடிக் கொண்டு இருக்கும் உன் அண்ணன் இலங்கை தீவில்தான் இருக்கிறான் . அவனை சந்தித்து மீட்க வேண்டும் என்றால் வா” என்று சொல்ல, அண்ணனைக் கண்டுபிடித்து கொண்டு வர சம்மதித்து அண்டர் கவர் ஆபீசராக இலங்கை செல்கிறான் .
அங்கே யாழ்ப்பணத்தில் போதை, கடத்தல் மூலம் நிறைய சம்பாதிக்கும் ஈழத் தமிழர்கள் மகாராஜாக்கள் போல வாழ, அவர்களுக்கு நம்பிக்கையான ஆளாக தன் அண்ணன் இருப்பதைப் பார்க்கிறான் .
அண்டர் கவர் ஆப்பரேஷன் ஆட்கள் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியவர , அது அண்ணனா , இவனா என்று அவர்கள் குழம்ப என்ன நடந்தது என்ற கேடுகெட்ட கேப்மாரி கதைதான் கிங்டம் .
உதயகீதம் படத்தில் ஜெயிலில் இருந்து வரும் கவுண்டமணி கடைக்கு தேங்காய் வாங்கப் போவார் . தேங்காய் விலை என்ன என்று கேட்க கடைக்காரர் ஆறுரூபாய் என்பார். உடனே கவுண்டமணி “ஏங்க இந்த ரெண்டு ரூபா மூணு ரூபாய்க்கு எல்லாம் தேங்கா இல்லியா?”என்பார்.
உடனே கடைக்காரர். “மூணு ரூபாய்க்கு முழுத் தேங்காயா? ஏய் நீ என்ன உள்ள (ஜெயில்ல) இருந்துட்டு வந்தியா?” என்பார்
திடுக்கிடும் கவுண்ட மணி , ” நான் உள்ள இருந்தது இவனுக்கு எப்படி தெரியும்?’ என்பார் .
கடைக்காரர் ” மூணு ரூபாய்க்கு முழு தேங்காயா? இப்போ தேங்கா பத்தைதான் கிடைக்கும்” என்பார்
அப்படி இந்த கிங்டம் டைரக்டர் பல வருடங்கள் ‘உள்ள’ இருந்துட்டு வந்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எழுத்து இயக்கம் கௌதம் தின்னனுரியினுடையது .
அப்படி ஒரு அரதப் பழசான காட்சிகள், திரைக்கதைக் காரணிகள், அண்ணன் தம்பிகள் ஜெயில் சண்டையில் அடையாளம் காண்பது , வசனம் பேசும் காட்சிகள்… என்று உருப்படியாக ஒன்றுமே இல்லை.
அந்த உருப்படியற்ற காட்சிகளை செலவு செய்து தொழில் நுட்பத்தோடு மாஞ்சு மாஞ்சு இழுக்கிறார்கள் . முடியல.
விஜய்எவரையோகொண்டாவுக்கு என்ன ஆச்சு? அப்படி ஒரு பரிதாப தோற்றம். (இங்கே இருக்கும் படத்தைப் பார்த்து ஏமாற வேண்டாம்)
சத்ய தேவ் நடிப்பு சிறப்பு
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை. அதை சொல்ல வக்கில்லை என்றால் மூடிக்கிட்டு இருக்கணும் .
அதை சிவில் வார் என்று சொல்லி வன்மம் கக்கி எவனோ எடுக்கும் வாந்தியை நக்கித் திங்கக் கூடாது .
யாழ்ப்பாண மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து மீண்டும் மீளாமலும் துன்புறுகிறார்கள் .
அவர்கள் எல்லாம் போதைப் பொருள் கடத்தல் செய்கிறார்கள். கோடிகளில் குளிக்கிறார்கள் என்பது காசுக்காக மலம் தின்னும் செயல். அது சிங்கள மலமா இல்லை வாடா இந்திய மலமா என்பது தெரியவில்லை.
இலங்கை என்பது தமிழர்களின் பூர்வீக நிலம். பின்னர் அங்கே இருந்த இயக்கர்கள் என்ற பழங்குடி மக்களோடு வங்காளிகள் கூடி உருவானதே சிங்கள இனம்.
இலங்கையில் உள்ள தெலுங்கர்கள் மலையகத் தமிழர்களோடு பஞ்சம் பிழைக்கப் போனவர்கள். அப்படிப் போய் சிங்களன் மற்றம் வெள்ளைக்காரனிடம் முறைவாசல் செய்த கூட்டத்தில் இருந்து வளர்ந்தவர் தான் வரதராஜ பெருமாள் போன்றவர்கள் . சரியான சமயத்தில் சிங்களர்களோடு சேர்ந்து தமிழர்களின் கழுத்தை அறுத்தவர்.
ஆனால் இந்தப் படத்தில் பாருங்கள் 1920 லேயே தெலுங்கு மக்கள் இலங்கை அருகில் தனித் தீவில் குடியேறினார்களாம். இதையே காரணம் காட்டி நாளை இலங்கை எங்களுக்கும் உரிமையான நிலம் என்று சொல்ல திட்டமோ என்னவோ . சொன்னதையே சொன்னீங்க. கிமு1920 ன்னு சொல்லிக்க வேண்டியதுதானே . எவன் உங்களை எல்லாம் கேட்கப் போறான்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட இன மக்களை பிச்சைக் காசுக்காக கேவலப்படுத்தி இப்படி எல்லாம் கம்பி கட்டற கதை எல்லாம் விடுவதற்குப் பதில், உருப்படியாக ஒரு கதை திரைக்கதை எழுதி எடுத்து இருக்கலாம். ஆந்திர மக்கள் காறித் துப்பாமலாவது இருப்பார்கள் .
கிங்டம் .. கிம் கதர்ஷியான் வீட்டு கோல்டன் டாய்லெட் பேசின்
