சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிக்க, வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, கிங்ஸ்லி நடிப்பில் அனீஸ் அஷ்ரப் இயக்கி இருக்கும் படம்
முப்பதாண்டுகளுக்கு மேலாகக் கொடி கட்டிப் பறந்த நாவல் எழுத்தாளர் மறைந்து விட்ட நிலையில் அவரது மகனிடம் (வெற்றி) அவர் பற்றிப் பேசி ஒரு தொடர் எழுத அவரை சென்னைக்கு வர வைக்கிறார் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ( ஷில்பா)
வந்த இடத்தில் அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (தம்பி ராமையா) நட்பு கிடைக்கிறது
நகரில் பெண்களின் முகத்தை அசிங்கமாக்கி கொலை செய்யும் ஒரு சைக்கோ
கொலைகாரனைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி அவர் கேட்க , இவனும் உதவுகிறான்.
சைக்கோ கொலைகாரன் விஷயம் போதாதென்று இளம்பெண்களை வீழ்த்தி பாலியல் வக்கிரங்களை தனித்துக் கொள்வதோடு அதைப் படம் எடுத்து விற்பனை செய்யும் அமைச்சர் மகனையும் வெளுக்க வேண்டி இருக்கிறது .
சைக்கோ கொலைகாரன் பிடிபட கிரைம் எழுத்தாளர் மகன் உதவியது எப்படி என்பதே படம்.
மிக எளிமையாக ஜாலியாக ஆரம்பிக்கும் படம்
தம்பி ராமையாவின் அலட்டல்கள் , அவரது விசாரணைக்கு நாயகன் அறிவுப்பூர்வமாக உதவும் விதம் யாவும் படத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது .
கிரைம் நாவலாசிரியரை சாகடித்து அவர் மகனை கொண்டு வருவதற்குப் பதில் அவரையே கொண்டு வந்தால் என்ன? அதுதானே சரி என்ற எண்ணம் வருகிறது . வெற்றி இளைஞராக நடிக்க வேண்டிய ‘கட்டாயம் ‘ அவருக்கு இருப்பதால் செய்த மாற்றம் என்பது புரிகிறது .
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்ஸ்பெகடர் வீட்டிலியே கடிக்கும் திரைக்கதை போக்கு எதிர்பார்க்க முடிகிற பக்கா டெம்ப்ளேட் .
நான் ஏன் சைக்கோ ஆனேன் என்று சைக்கோ சொல்லும் கதை அபத்தம் .
ஒரு நாள் ஒரு பாரில் தண்ணி அடிக்கப் போனவன், பதினாறு பாருக்கு ஓனர் ஆகும் அளவுக்கு ஓர் அழகான பணக்காரக் காதலி கிடைத்த பின்னும் . அவன் விளையாட்டு மைதானத்தில் பலர் பார்க்க ஒரு பள்ளி மாணவியை முத்தமிடுவானாம் . தடுப்பவரை அடிப்பானாம் . பதிலுக்கு அவர்கள் அடிக்க இவன் சைக்கோ ஆவானாம். அட போங்கப்பா .
சைக்கோ தனது நியாயம் என்று ஒன்று சொன்னால் அது அதிரும்படி யோசிக்க வைக்கும்படி இருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் கதை என்று ஒன்றுமே சொல்லக் கூடாது. அதாவது இப்படி சொதப்பக் கூடாது .
மொத்தத்தில் சனி பைல்ஸ் முதல் பக்கம்.. அரைப்பக்கம் மட்டும் சுவாரஸ்யமாக இருந்த பக்கம்
