ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் சுபா செந்தில் தயாரிக்க, சிவகுமார், பாடினி குமார், ராம்ஸ் , ஜான் விஜய் நடிப்பில் ஷிவானி செந்தில் இயக்கி இருக்கும் படம் டேக் டைவர்சன்.
நொட்டை, நொள்ளை சொல்லியே பல பெண்களை திருமணத்துக்கு நிராகரித்த ஐ டி நிறுவன இளைஞன் ஒருவன் (சிவ குமார்) ஒரு நிலையில் முதன் முதலில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறான் .
அங்கே போனால் அந்தப் பெண் 70 கிட்ஸ் தாதா ஒருவனின் ( ராம்ஸ் ) பிடியில் இருப்பது தெரிகிறது . அதன் பின் நடக்கும் சம்பவங்களே டேக் டைவர்சன்
திரைக்கதையில் இவர்களே எதற்கு எடுத்தாலும் ஏகப்பட்ட டைவர்ஷன் எடுக்கிறார்கள் . அல்லது பயணமே போகாமல் திரைக்கதையில் நின்ற இடத்திலேயே நிற்கிறார்கள்.சிரத்தை இல்லாத திரைக்கதை, அதீத நாடகத்தனம், நீள நீளத்துக்கு காட்சிகள், வண்டி வண்டியாய் வசனங்கள் – அதுவும் சுவாரஸ்யம் இல்லாமல், தீர்மானமற்ற படத் தொகுப்பு ஆகியவை குறைகள் .
தான் எந்தப் பெண்ணையும் நிராகரிக்காத ஆனால் பல பெண்களால் நிராகரிக்கப்பட்டு கல்யாணத்துக்கு பெண் தேடும் ஒருவனாக நாயகன் இருப்பது அல்லவா இந்தக் கதைக்கு பொருத்தம்?
