வித்தியாசமான கதைக் களத்தில் டீக்கடை பெஞ்ச் ‘

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன்,

டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –  வெங்கடேஸ்வர் ராவ்

இசை  –  V.ஸ்ரீ சாய் தேவ்

கலை  –   அன்பு

எடிட்டிங்   –  ஆனந்த்

நடனம்  –  கிரீஷ், ஹபீப்

தயாரிப்பு நிர்வாகம் –  சரவணன்.ஜி  

தயாரிப்பு  –  V.J.ரெட்டி, S.செந்தில்குமார், N.செந்தில்குமார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் –  ராம்ஷேவா.

படத்தின் பாடல் வெளியீட்டில் இயக்குனர்கள் சமுத்திரக் கனி மற்றும் பண்டிராஜ் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் . 

ராம கிருஷ்ணன் எங்கள் நண்பன் . மிகுந்த திறமை சாலி. உயர்ந்த இடத்துக்கு வர வேண்டியவன் . விரைவில் வருவான் என்று நம்புகிறோம் . விரும்புகிறோம் ” என்று வாழ்த்தினர் 

இயக்குனர் ராம் ஷேவாதன் பேச்சில் , “இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள்.

இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால்  நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான்.

இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக டீக்கடை  பெஞ்ச்  படம் உருவாகி உள்ளது.

ஐந்து பாடல்களும் சிறப்பாக் இருக்கும்.  கானா பாலா ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார்.

படப்பிடிப்பு பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது  ” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *