பயாஸ்கோப் U.S.A மற்றும் அகிரா புரடக்ஷன்ஸ் சார்பில் கால்டுவெல் வேல்நம்பி, பாலசுவாமிநாதன் , பின்ச்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி, ராதா கிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் தயாரிக்க, அதே பார்த்திபன் , யோகி பாபு, தீபேஷ்வரன், பிராங்கென்ஸ்டைன், தீபன், விஷ்ருதா ஷிவ், ரிஷி, சில்வர்ஸ்டன், அஷ்மிதா மகாதேவன், அம்ருதா, உதய பிரியன், கிருத்திகா, ஜான் போஸ்கோ. ரோஷன், பிரசிதா நசீர் நடிப்பில் பார்த்திபன் நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்.
துடுக்கான, பள்ளி மாணவ மாணவிகள் குழு ஒன்று ஒரு நாள் பகல் நேர பள்ளி நேர விசிட் ஆக, பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு மாணவரின் கிராமத்துப் பாட்டி வீட்டுக்கு போய் வரக் கிளம்புகின்றனர . அதில் உள்ள ஏழை அனாதை மாணவன் ஒருவனை ஒரு பணக்கார மாணவன் தொடர்ந்து அவமானப்படுத்துகிறான் . ஒரு சிறுமி அவன் மீது அன்பு காட்டுகிறாள். ஒரு மாணவனும் மாணவியும் காதலிக்கிறார்கள்
சாலையில் நடக்கும் போராட்டம் காரணமாக வழி மாறி எங்கோ அவர்கள் போய்விட , அவர்களுக்கு பல அமானுஷ்யம் போன்ற அனுபவங்கள் ஏற்படுகின்றன.
அவர்களில் ஒவ்வொருவராக காணமல் போகின்றனர் .
இன்னொரு பக்கம் வேற்று கிரக வாசிகளோடு தொடர்பு கொள்ள சிக்னல் அனுப்பி விட்டுக் காத்திருக்கும் நபரின் வாரிசான நபர் (பார்த்திபன்) அந்தப் பணியை மேற்கொள்கிறார்
ஒரு நிலையில் அவரிடம் மாணவர்கள் தஞ்சம் அடைய நடந்தது என்ன என்பதே படம் .
அமானுஷ்யத்தில் துவங்கி அது அமானுஷ்யம் இல்லை அறிவியல் என்று மாறி பயணிக்கும் படம்.
ஆரம்பத்தில் ஓவராகப் பேசும் குழந்தைகள் எரிச்சலை ஓட்டினாலும் இன்னொரு பக்கம் பார்த்திபனின் வசனங்கள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன.
அய்யன்காளி என்ற சிறுவன் கதாபாத்திரமும் அதன் முடிவும் அருமை
மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து எடுக்கப்படும் செத்துப் போன ஆட்டின் வயிற்றில் உள்ள ஆட்டுக் குட்டி உயிரோடு இருப்பது போன்ற காட்சிகள் ஈர்க்கின்றன.
கேவ்மிக் ஏரியின் ஒளிப்பதிவு , இமானின் இசை மற்றும் பாடல்கள் அருமை
குழந்தைகளை வைத்து வழக்கமான பேய்ப் படம் தருவதற்குப் பதில் சயின்ஸ் ஃபிக்ஷன் தந்திருக்கும் விதத்துக்காக பாராட்டலாம்