‘விதிமதி உல்டா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை,
நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கிள் டிராக் டீசராக வெளியிட்டார்.
இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடிப் பாடி நடித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்தப் படத்தின் இசையை, அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்க,
டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோரும்,
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘விதிமதி உல்டா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

