உண்மைக் கதையில் கிஷோர் நடிக்கும் ‘கதிர்’

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்க,  
 
புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம், கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ’பசங்க’ சிவகுமார்,
 
செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்க, தோழர் அரங்கன் இயக்கும்  படம் ‘கதிர்.
 
ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய,
 
மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.எம்.நந்தகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
 
 இப்படம் ஓர் உண்மை  சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
 
கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர், அனைவரும் தெரிந்தவராக இருந்த ஒருவர். நிஜத்தில் வாழ்ந்த அந்த கும்பகோணம் குணாவாக,
 
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில்,
 
8 முறை குங்ஃபு-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார்.
 
கிஷோர் –  மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக எடுக்கப்பட்டு  வருகிறது.
 
சேரன்  பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த செளந்தர்யன் இசையமைக்கும் 50 வது படமாக,
 
 உருவாகும்  இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு முன்னணி ஹீரோயின் ஒருவர் நடனம் ஆட இருக்கிறார்.
 
சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால், என்ன நடக்கும் என்பதை எதார்த்தத்தோடும், தமிழ் கலாச்சாரப் பண்பாட்டோடும்,
 
பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக கூடிய அளவுக்கு கண்ணியமான காமெடியோடும்  ஜனரஞ்சகமான படமாக,
 
கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *