ஓட்டுப் பணத்துக்கு வேட்டு வைக்கும் ‘தப்புத் தண்டா’

thappu-1
கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து சத்யா என்ற பெயரில் நாயகனாகவும் நடிக்க, ஜோடியாக சுவேதா கய் நடிக்க, 
இவர்களுடன்  மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி மற்றும் ஆத்மா ஆகியோர் நடிக்க, 
 பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற  ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும்  படம்  ‘தப்புத் தண்டா’  
thappu-2
கதை? 
எப்போதெல்லாம் தேர்தல் களம் நாட்டில் சூடு பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஓட்டுக்காக ‘பணப் பட்டுவாடா’   நடைபெறுவதை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்…. 
அப்படி ஒரு தேர்தலுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக அனுப்பப் படும் மொத்தப் பணத்தையும் ஒரு லோக்கல் கொள்ளைக்காரனின் நான்கு  ஆர்வக்கோளறு சீடர்கள்   கொள்ளை அடித்துவிட்டால்
thappu-3நிலைமை எப்படி இருக்கும் என்பதை  நகைச்சுவை – கிரைம் கலந்து சொல்லும்  திகில்  படமாம் இது .
படத்தின் ஒளிப்பதிவாளர் அ வினோத் பாரதி (நெருங்கி வா முத்தமிடாதே), இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை) கலை இயக்குனர் பி சிவசங்கர்  
படம் பற்றிக் கூறும்  இயக்குனர் ஸ்ரீகண்டன். “தேர்தல், நான்கு திருடர்கள், கதாநாயகியின் காதல் என  மூன்று வெவ்வேறு கதை களங்களை கொண்டு  படம் நகரும்..
thappu-5
முதல் பாதியை  நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியை கிரைம் கலந்த திகிலாகவும் நாங்கள்  உருவாக்கி இருக்கிறோம்.  
படத்தின் முக்கியமான சிறப்பம்சமே ஜான் விஜய் சாரின் கதாபாத்திரம் தான்…. முதல் முறையாக, திருடர்களுக்கான  ஒரு பல்கலைக்கழகத்தின் நிறுவனராக அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்….
திருட்டு தொழிலில்  இணைய விருப்பப்படும்  இளைஞர்களை படிப் படியாக முழு நேர திருடனாக்குவதுதான்  அவரது வேலை  அதேபோல் அஜய் கோஷ் நடித்து இருக்கும் கதாபாத்திரமும்  மிக முக்கியமான ஒன்று ..
thappu-4
கதை பல்வேறு பரிமாணங்களில் செல்வதற்கு அவருடைய கதாபாத்திரம்தான் பாலமாக செய்லபடும். விசாரணை திரைப்படத்திற்கு பிறகு
அவர் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயமாக அணைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும்….
படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும்  ஜோடி இல்லை . அவரது கதை தனியாக , இவரது கதை தனியாக போகும். 
thappu-6
கூத்துப் பட்டறையில் இருந்து உதயமான  எங்கள் படத்தின் தயாரிப்பாளர் – ஹீரோ சத்திய மூர்த்தி , ‘தப்பு தண்டா’ படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கிறார்.
மற்ற எல்லா நகைச்சுவை கலந்த திகில் படங்களில் இருந்தும் எங்களின் ‘தப்பு தண்டா’ திரைப்படம் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் .
“மிக வித்தியாசமான கதை . அதை இயல்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் . எங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் சத்திய மூர்த்தி , அலையஸ்  ஹீரோ சத்யா 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *