விழிப்புணர்சிக்குத் ‘திறப்பு விழா’

thira 1

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பாக நல்ல நிகழ்வுகளை  சூடு குறையாமல் பிரதிபலிப்பதே கலையின் முக்கிய நோக்கம் அதை தரத்தோடும் பிரதிபலித்தால் அதற்கான மரியாதையே தனி.

தரமாக பிரதிபலிக்கிறார்களா என்பதை  படைப்பு வெளிப்படுவதற்குள் சொல்ல முடியாது . ஆனால் உடனடியாகப் பிரதி பலிக்கும் வகையில் கவனம் கவர்கிறது  திறப்பு விழா படம்

பூமிகா  இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம் ஜெரினா பேகம் தயாரிக்க,

இயக்குனர் ஹரியிடம் வேங்கை, சிங்கம் , பூஜை போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கே. ஜி. வீரமணி இயக்கி இருக்கும் படம் திறப்பு விழா .

thira 2

புதுமுகம் ஜெயானந்த் நாயகனாக நடிக்க, பல படங்களில் நடித்த ரஹானா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், மனோபாலா  , ஜி எம் குமார், பசங்க சிவகுமார், ரோபோ சங்கர்,

சூப்பர் குட் லட்சுமணன், சிசர்ஸ் மனோகர், நாதஸ்வரம் முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு ஆர் பி செல்வா, இசை வசந்த ரமேஷ், எடிட்டிங் பி ஜி வேல். கலை எஸ் எஸ் மூர்த்தி,, நிர்வாகத் தயாரிப்பு பி . ரத்னவேல்

thira 3

பாடல்கள் நா,முத்துக்குமார், பழனி பாரதி, நந்தலாலா, ச, ஞானக் கரவேல் , நிலம் .

மக்கள் தொடர்பு – பெரு. துளசி பழனிவேல்

விருத்தாச்சாலம் , நெய்வேலி,  கல்பாக்கம் , சென்னை முதலிய ஊர்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, இப்போது  பின் பணியாகக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்தப் படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது .

அதெல்லாம் சரி .. ‘ஆரம்பத்தில் என்னமோ சொன்னீங்களே அது என்ன?’ என்றுதானே கேட்கறீங்க .

thira 4

இன்று தமிழகம் எங்கும் டாஸ்மாக்குக்கு எதிராக மக்களே கிளர்ந்து எழுந்து போராடி வருகிறார்கள் அல்லவா ?

அதை வைத்து கதை திரைக்கதை அமைத்து, காதல் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் ஜனரஞ்சகமாக படததை எடுத்துள்ளார்களாம் .

சிறப்பு !  தேவையான கதை .

நல்லத சொல்றீங்க . நல்லா சொல்லுங்க மக்கா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *